டிஎன்ஏ ரிப்போர்ட் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த பாரதி.! கண்ணம்மா ஏற்றுக் கொள்வாரா.?

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் பாரதி கண்ணம்மாவின் மீது எந்த தப்பும் செய்யவில்லை லட்சுமி மற்றும் ஹேமா தன்னுடைய மகள்கள் தான் என்பதை தெரிந்து கொள்வார் என அதிக எதிர்பார்ப்புடன் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெண்பா மற்றும் ரோகித் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் வெண்பா இதற்கு மேல் இந்த குழந்தையை எதற்காக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே மாடியில் இருந்து கீழே விழுகிறார் பிறகு பாரதி பணியாற்றி வரும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த குழந்தை கலைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் பாரதி மருத்துவமனைக்கு வரும் நேரத்தில் வெண்பா மூச்சு வாங்குவது போல் நடிக்கிறார் இதனை தெரிந்து கொண்ட பாரதி வெண்பாவை எச்சரித்து விட்டு செல்கிறார் இப்படிப்பட்ட நிலையில் பாரதியின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாரதியை வெறுத்து வருகிறார்கள்.

எனவே பாரதி எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்காத நிலையில் பாரதி என்ன செய்வதென்று தெரியாமல் கவலைப்பட்டு வருகிறார் மேலும் இவர் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டுக்காக காத்து வந்த நிலையில் இன்று அந்த ரிப்போர்ட்டின் ரிசல்ட் வருகிறது. அதனை பார்த்ததும் பாசிட்டிவ் என வர பாரதி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். மேலும் இத்தனை நாளா நம்ம தான் தப்பு செஞ்சுவிட்டோம் கண்ணம்மா என்னை அடித்துக் கொன்றாலும் பரவாயில்லை அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக கண்ணம்மாவை தேடி அவருடைய வீட்டிற்கு செல்கிறார்.

மேலும் இவர்களை கண்ணம்மா பாரதி செய்த தவறை மன்னித்து பாரதியை ஏற்றுக் கொள்வாரா என்பதை வைத்துதான் இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் வெண்பா தான் இந்த அனைத்து சூழ்ச்சிகளுக்கும் காரணம் என பாரதி என்னும் தெரிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.