விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் வெண்பா செய்த அனைத்து பித்தலாட்ட வேலைகளும் பாரதிக்கு தெரிய வர இருக்கிறது மேலும் ஏற்கனவே பாரதி வெண்பாவால் தன்னுடைய குடும்பத்தினை இழந்துள்ள நிலையில் மீண்டும் பாரதியிடம் வெண்பா வாங்கிக் கட்டி கொண்டிருக்கிறார்.
அதாவது வெண்பா தன்னுடைய திட்டத்தின் படி பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்த நிலையில் ரோகித்தால் வெண்பா கற்பம் அடைகிறார் எனவே அந்த குழந்தை யாருடையது என்பது தெரியாதது போல் வெண்பா பாரதியை தன்னுடைய திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் பாரதியும் வெண்பா சொன்ன பொய்யை உண்மையான நம்பிக்கொண்டு திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.
இந்த தகவல் சாந்தியின் மூலம் அனைவருக்கும் தெரிய வருகிறது பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் கோவிலுக்கு செல்ல பிறகு இவர்களுடைய திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார்கள் இதன் காரணத்தினால் ஹேமா, லக்ஷ்மி என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாரதியை வெறுத்துள்ள நிலையில் யாரும் தற்பொழுது அவரிடம் பேசவில்லை பிறகு ரோகித் வெண்பாவை திருமணம் செய்து கொள்கிறார்.
இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு முதல் இரவு ரெடியான நிலையில் வெண்பா பாரதிக்காக தான் இந்த குழந்தையை வயிற்றில் சுமந்தோம் இதற்கு மேல் தேவையில்லை என படிக்கட்டில் இருந்து தானாக கீழே விழுகிறார். ரோஹித் பதறி அடித்துக் கொண்டு வெண்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் அங்கு மருத்துவர் குழந்தை கலைந்து விட்டதாக கூறுகிறார்கள். மேலும் பாரதி வரும் நேரத்தில் வெண்பா உயிருக்கு போராடுவது போல் நடிக்கிறார்.
இதனை தெரிந்து கொண்ட பாரதி சாந்தி, வெண்பா இருவரையும் திட்டுகிறார் பிறகு இதற்கு மேல் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என வெண்பா பாரதியிடம் கூற பாரதி நீ இல்லாமல் இருந்தால் தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும் முன்னால் என்னுடைய குடும்பத்தை இழந்து விட்டேன் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.