வேணும் என்றே குழந்தையை கலைப்பதற்காக வெண்பா போட்ட பிளான்.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்..

bharathi-kannama-serial
bharathi-kannama-serial

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் அதனை தெரிந்து கொண்டு எப்படியோ அந்த திருமணத்தை கண்ணம்மா தடுத்து நிறுத்தி உள்ளார் மேலும் இவ்வாறு பாரதி செய்தது பலருக்கும் அதிர்ச்சியான நிலையில் இருப்பதால் லட்சுமி, ஹேமா உள்ளிட்ட கண்ணம்மா வரை அனைவரும் பாரதியை வெறுத்து வருகிறார்கள்.

இதனால் பாரதி உன்னால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனை யாரும் இல்லாத அனாதையாக நிற்கிறேன் என வெண்பாவிடம் சண்டை போட்டுவிட்டு இதற்கு மேல் என் மூஞ்சிலேயே முழிக்காத என வெண்பாவிடம் கூறிவிட்டார். மேலும் அவர் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வரும் என்பதற்காக ஆர்வமாக காத்திருக்கிறார்.

தன்னுடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய அம்மா மற்றும் தம்பியிடம் பேச முயற்சித்தும் அனைவரும் இவரை நிராகரித்து வருகிறார்கள். மேலும் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வெண்பா மற்றும் ரோகித் இருவருக்கும் முதலிரவு தயாராகி வருகிறது. எனவே வெண்பா ரோகித்தை வேண்டாம் என கூறிவிடுவார் என்பதற்காக ஷர்மிளா தன்னுடைய சொத்தில் பாதி பங்கு ரோஹித்தின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார். மேலும் வெண்பா ரோகித்தை வேண்டாம் எனக் கூறிவிட்டால் முழு சுத்தம் ரோகித் இருக்குதான் செல்லும் வெண்பாவிற்கு எந்த சொத்தும் கிடையாது.

இதன் காரணத்தினால் வேறு வழி இல்லாமல் துரோகித்துடன் சேர்ந்து வாழ்வதற்கு முடிவெடுத்து இருக்கிறார் வெண்பா. ஆனால் வயிற்றில் வளரும் குழந்தையை வைத்து பாரதியை மிரட்டிய நிலையில் இதற்கு மேல் எதற்கு இந்த குழந்தை என மாடி படிக்கட்டில் இருந்து தானாக விழுகிறார் உடனே அனைவரும் பதறி கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.