விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடியப்போகும் நிலையில் பாரதி வெண்பா இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் கண்ணம்மா அவருடைய குடும்பத்தினர்கள் அந்த திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர் தொடர்ந்து கண்ணம்மா பாரதியை கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகிறார்.
பிறகு சௌந்தர்யாவும் பாரதியை திட்டும் நிலையில் இன்றைய எபிசோடில் பாரதியிடம் பேசும் சௌந்தர்யா உன் மீது வெடிக்குண்டு கட்டி இருந்த பொழுது கண்ணம்மா தான உன்னை காப்பாற்றினால் அந்த நன்றிக்காவது அவளை நீ மீண்டும் ஏற்றுக் கொள்வாய் என நினைத்தேன் அதற்காக உன்னிடம் கெஞ்சவும் செய்தேன்.
ஆனால் நீ அதை செய்யாமல் வெண்பா கழுத்தில் தாலி கட்ட முடிவெடுத்து இருக்கிறாய் கண்ணம்மா அவளுடைய உயிரை பணையை வைத்து உன்னை காப்பாற்றி இருக்கிறார். அப்பொழுது கூட அவள் மேல் உனக்கு பாசம் வரவில்லை போலீஸ் கூட உன்னிடம் இதைதான் கேட்டனர் ஆனால் இப்பொழுது வெண்பாவுக்கு தாலி கட்ட வந்திருக்க இதுக்கு பேரு என்ன என்ன சௌந்தர்யா கேட்கிறார்.
பிறகு அகிலன் நான் உன் மேல எப்படி எல்லாம் மரியாதை வைத்திருந்தேன் அன்னைக்கும் உனக்கும் மனக்கசப்பு ஆனா சரியாகிவிடும் என நினைத்தேன் ஆனால் நீ இப்படி துரோகம் பண்ணுவன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை உன்னை என்னோட அண்ணன் என இனிமேல் நான் உன்னை சொல்ல மாட்டேன் எனக்கு நீ அண்ணனே கிடையாது என்று கூறிவிட்டு ஹேமாவும் லட்சுமியும் அழுது கொண்டே கண்ணம்மாவிடம் நிற்கிறார்கள்.
அதன் பிறகு ஹேமா உங்களை பார்த்தாலே பிடிக்கல நீங்க என்கிட்ட பொய் சொல்ல மாட்டேன்னு தானே சொன்னிங்க ஆனா இப்பொழுது எனக்கு தெரியாம வெண்பா ஆன்ட்டியை தான் கல்யாணம் பண்ணிக்க வந்து இருக்கீங்க உங்களை எனக்கு பிடிக்கவே இல்லை என கூறுகிறார் அடுத்ததாக லட்சுமி எனக்கு அம்மாவுக்கு அடுத்ததாக டாக்டர் அப்பாவை தான் பிடிக்கும் ஆனால் இப்பொழுது உங்களை பிடிக்கவே இல்லை எங்களை இங்கு இருந்து கூட்டிட்டு போயிடுங்க என கண்ணம்மாவிடம் கேட்டு அழுகிறார்.
பிறகு அனைவரும் பாரதியை அசிங்கப்படுத்திவிட்டு செல்கிறார்கள் வெண்பா பாரதியிடம் வர உன்னால்தான் நான் நடுரோட்டில் நிற்கிறேன் இதற்கு மேல் என் மூஞ்சியில் முழிக்காதே என திட்டி விட்டு செல்கிறார். பிறகு வெண்பா கதறி அழ ஷர்மிளா வெண்பாவிடம் இணையும் உன்னை யார் திருமணம் செய்து கொள்வார் என அழுது கொண்டிருக்கிறார் உடனே ரோஹித் நான் திருமணம் செய்து கொள்கிறேன்.
அவள் வயிற்றில் என் குழந்தை இருக்கிறது அதோடு வெண்பா மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன் என ஐயரிடம் தாலியை கேட்கிறார் அப்பொழுது ரோகிதின் அம்மா உன்னை ஏமாத்திட்டு போனவ அவ வேண்டாம் என அழுது புலம்புகிறார் ஆனால் ரோகித் எப்படியோ சமாளித்து வெண்பாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் நடைபெற இருக்கிறது.