ஹேமாவை கண்டுபிடித்த குடும்பத்தினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! சுக்குநூறாக உடைந்த பாரதி..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உண்மையை தெரிந்து கொள்ள இருந்து வரும் நிலையில் பல இடையூறுகள் இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக டெல்லி சென்றுள்ளார் மேலும் அப்போது ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் தனது குழந்தைகள் தான் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார் இதனால் உண்மையை தெரிந்து கொண்ட பாரதி சுக்குநூறாக உடைந்து போகிறார் மேலும் கண்ணம்மாவை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தி உள்ளோம் என்று நினைத்து வருத்தப்படுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பாரதி டெல்லி சென்ற அன்று வெண்பா ஹேமாவை ஆள் வைத்து கடத்தியுள்ளார் அந்த வகையில் ஹேமாவை கன்டைனரில் அடைத்து வைத்து கடத்திய நிலையில் ஹேமாவை காணவில்லை என கண்ணம்மா பதறி போய் பிறகு அகில், சௌந்தர்யா என அனைவரும் ஹேமாவை தேடுகிறார்கள்.

காரில் சென்று தேட அப்பொழுது மிக அருகில் லொகேஷன் காண்பிப்பதை தெரிந்து கொண்ட கன்டைனரில் இருப்பவர்களை திறந்து காட்ட சொல்ல அவர்கள் மீண்டும் அடிக்க பெரிய சண்டையாகிறது. இந்த நேரத்தில் அருகில் இருந்த போலீசாரிடம் இதனைப் பற்றி கூற அதனை திறந்து பார்த்தால் ஹேமா இருப்பது தெரிய வருகிறது. இதனால் அனைவரும் ஹேமாவை பார்த்து நிம்மதி அடைய திடீரென்று மயங்கி விழுகிறார்.

பின்னர் ஆம்புலன்ஸில் ஹேமாவை கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள் இது பாரதிக்கு தெரியவில்லை மேலும் தன்னுடைய ஃபோனையும் சுவிட்ச் ஆப்பில் வைத்திருக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாரதி கிளம்பும் நேரத்தில் அவருடைய கையில் ரத்தம் வருகிறது.

மேலும் கண்ணாடியும் கீழே விழ பிறகு தன்னுடைய குடும்பத்தில் யாரோ யாருக்கோ ஏதோ ஆகியுள்ளது போல் நினைக்கிறார் தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்யலாம் என நினைத்தும் பிறகு போன் செய்யாமல் அங்கிருந்து கிளம்புகிறார் பாரதி.