வந்தா வாழ்வு வரலானா சாவு… விபரீத முடிவில் பாரதி… விருவிருப்பாகும் பாரதி கண்ணமா சீரியல் எபிசொட்

bharathikannama
bharathikannama

விஜய் டிவியில் ட்ரைன் டைமிங் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக கண்ணம்மாவின் மீது சந்தேகத்தில் இருந்து வரும் பாரதி திடீரென்று ஹேமா லட்சுமி இருவரும் ஒருவேளை தன்னுடைய குழந்தைகளாக இருப்பார்களோ என்று யோசித்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்தார். மேலும் இதற்கான ரிசல்ட் விரைவில் வரும் என காத்து வந்த நிலையில் தற்பொழுது வரையிலும் வரவில்லை.

டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்த பிறகு தான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் பாரதி இப்படிப்பட்ட நிலையில் டெல்லிக்கு சென்றால் உடனடியாக டிஎன்ஏ டெஸ்டில் முடிவை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக டெல்லி கிளம்ப முடிவெடுத்து இருக்கிறார். மேலும் நடுவில் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என பாரதி பொறுமையாக இருந்து.

இந்நிலையில் டெல்லிக்கு கிளம்பிய பாரதி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் முக்கியமான வேலையாக செல்வதாக கூறிவிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு செல்கிறார். இவரு டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டின் படி ஹேமாவும் லட்சுமி தனது குழந்தைகள்தான் என்று தெரிந்து கொண்டு இங்கே வந்து கண்ணம்மா காலில் விழுந்த மன்னிப்பு கேட்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழலாம் என்றும் ஒருவேளை அவர்கள் இருவரும் தனது குழந்தைகள் இல்லை என்று வந்துவிட்டால் இனி அவர்கள் இந்த வீட்டிற்கு வரவே கூடாது.

அனைவரும் ஏமாற்றும் ஏமாற்றியாக வாழ்வதில் அர்த்தமில்லை அப்படியே செத்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார் பாரதி. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ஹேமா வெண்பாவை வழியில் சந்தித்த நிலையில் ஹேமா தன்னுடைய அப்பாவை தேடிச் செல்வதாக கூற கண்ணம்மா என்னுடைய அப்பா யார் என கூற மாட்டேன்கிறார என வெண்பாவிடம் கூற வெண்பா அதற்கு உன் அப்பா யாருன்னு அவளுக்கே தெரியாது என கிண்டல் செய்கிறார்.

இதனால் கோபமடைந்த ஹேமா கல்லை எடுத்து வெண்பாவின் நெற்றியில் அடிக்கிறார் உடனே வெண்பா ரவுடிகளை வைத்து ஹேமாவை கடத்துமாறு கூறுகிறார் அந்த ரவுடிகளும் ஹேமாவை கடத்தி விடுகிறார்கள் பிறகு அகிலன் கண்ணம்மா சௌந்தர்யா மூவரும் ஹேமாவை தேடுகிறார்கள்.