விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று விக்ரம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் டிஎன்ஏ டெஸ்டில் கூட என் கணவர் சந்தேகப்படுவதாக கண்ணம்மாவிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதனைக் கேட்டவுடன் பாரதி அதிரடி முடிவை ஒன்று எடுக்க உள்ளார்.
அதாவது பாதி கண்ணம்மா சீரியலில் தற்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வரவில்லை என்பதற்காக எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் பாரதி பொறுமையாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பாரதி பணியாற்றி வரும் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவரிடம் உங்களுடைய கணவர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என கண்ணம்மா கேட்கிறார்.
உடனே அந்த பெண் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பின் கூட அவருக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது நான் பாரதியிடம் சொல்லி தான் எல்லாம் செய்தேன் என அவர் மீண்டும் என் மீது சந்தேகம் படுவதாக கூறுகிறார். பிறகு நீங்களும் பாரதி சாரும் நாங்க ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டுமென நினைத்தீர்கள் ஆனால் இப்படி நம்பிக்கை இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அவர் வருத்தப்பட்டு கண்ணம்மாவிடம் பேசுகிறார்.
இதனை பாரதியும் கேட்கிறார் பிறகு பாரதி நான் எடுக்க இருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் எந்த கோளாறும் வராமல் இருக்க வேண்டும் அதனால் அந்த ரிசல்ட் நாளை நேரடியாக சென்று வாங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்காக பாரதி பாரின் செல்கிறார் அதற்காக இன்று கிளம்பிருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் வெண்பா ஹேமாவை சந்திக்க வெண்பாவிடம் ஹேமா தன்னுடைய அப்பாவை தேடுவதாக கூறுகிறார்.
மேலும் கண்ணம்மாவிடம் கேட்கப் போவதாகவும் கூற அவளுக்கே உன் அப்பா யாருன்னு தெரியாது என வெண்பாக் சொல்கிறார். இதனால் கோபமடைந்த வெண்பா ஹேமாவை ஆள்களை வைத்து கடத்துகிறார் இந்த நேரத்தில் கண்ணம்மா, சௌந்தர்யா இருவரும் ஹேமாவை தேட ஹேமாவின் செப்பல் கிடப்பது தெரிய வருகிறது இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.