உனக்கு பொறந்த குழந்தைக்கு நீ அப்பனா இருக்க துப்பு இல்ல.! என பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்பொழுது வெண்பா பாரதியின் மனதை மாற்றிய திருமணத்திற்கு ஒத்துக்க வைத்துள்ளார்.

பாரதியும் வேறு வழி இல்லாமல் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் கோவிலில் திருமணம் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் வெண்பா கழுத்தில் பாரதியை தாலி கட்ட போகும் கடைசி நிமிடத்தில் கண்ணமா அங்கு வந்து திருமணத்தை நிறுத்துகிறார்.

இதனால் கோபமடைந்த சௌந்தர்யா பாரதியிடம் வெண்பாவை ஏன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த எனக் காரணத்தைக் கேட்கிறார். அதற்கு பாரதி வெண்பா இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறாள் அவளோட குழந்தைக்கு ஒரு சமூக அந்தஸ்து வேணும்னு என்கிட்ட கேட்டா இதன் காரணத்தினால் தான் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதித்தேன் என கூறுகிறார் இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த கண்ணம்மா பாரதியை மிகவும் பங்கமாக கேள்வி கேட்கிறார்.

அதில் உனக்கு பிறந்த குழந்தைக்கு நீ அப்பா நா இருக்க துப்பு இல்ல இதுல இவளுடைய குழந்தைக்கு நீ அப்பனா இருக்க போறியா பெரிய தியாகினி என வெளுத்து வாங்குகிறார் கண்ணம்மா. பிறகு வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணம் நான் தான் என ரோகித் கூறுகிறார் இதைக் கேட்டவுடன் பாரதியா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு கண்ணம்மா தன்னுடைய இரண்டு மகள்களான லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரையும் அழைத்துக் கொண்டு கோவிலில் இருந்து செல்கிறார் அப்பொழுது பாரதியின் ஒட்டு மொத்த குடும்பமும் அவருக்கு எதிராக இருக்கிறது இதன் பிறகு பாரதி தப்பையும் உணர்ந்த கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார்.

இதனை தொடர்ந்து வெண்பா மற்றும் ரோகித் இருவருக்கும் கோவிலில் திருமணம் நடக்கிறது தற்பொழுது வேறு வழி இல்லாமல் கண்ணமா ரோகித்துடன் சேர்ந்து வாழவுள்ளார். இன்னும் சில நாட்களில் டிஎன்ஏ டெஸ்ட் முடிவு வெளியாகி கண்ணம்மா பாரதி இருவரும் சேர்ந்து வாழப் போகிறார்கள்.