மீண்டும் பாரதிக்கு வாய்ப்பு கொடுத்த கண்ணம்மா.! சோகத்தில் இருக்கும் ஹேமா..

bharathi-kannama
bharathi-kannama

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோடில் ஹேமா ஸ்கூலில் லட்சுமியிடம் உனக்கு சமையலமா தான் என்னுடைய அம்மா என்று தெரிந்தும் ஏன் என்கிட்ட சொல்லவில்லை என கேட்டு கோபப்படுகிறார்.

மேலும் என்கிட்ட இதற்கு மேல் பேசாதே எனவும் சத்தம் போட அடுத்ததாக பாரதி ஹாஸ்பிடலில் யோசனையில் இருக்கும் பொழுது கிளினிக்கில் இருந்து போன் செய்து மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ரிப்போர்ட் கிடைத்துவிடும் என சொல்கிறார்கள். பிறகு பாரதி பேசி முடித்தவுடன் கண்ணம்மா உள்ளே வர அவரிடம் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும் என சொல்லி ஹேமாவை என்கிட்ட திரும்பக் கொடுத்து விடு என கேட்க அது முடியாது என கண்ணம்மா கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா நான் ஒரு வழி சொல்லட்டுமா அப்படியே வந்துடுங்க நம்ம வீட்டுக்கு போகலாம் பழச எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கையை தொடங்கலாம் குழந்தைங்க கூட சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல பாரதி டெஸ்ட் வராமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என என்னால கண்மூடித்தனமா எதையும் நம்ப முடியாது என சொல்ல அப்பொழுது கண்ண மூடிக்கிட்டு இருங்க என்னால இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது என சொல்லி கண்ணம்மா வெளியே கிளம்புகிறார்.

வீட்டில் லட்சுமி ஹேமாவிடம் பேச முயற்சி செய்ய என்னிடம் பேசாத என்னை தனியாக விடு என சொல்லி கோபப்படுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இவ்வாறு இன்னும் இந்த சீரியலை வைத்து ஒரு மாதம் ஓட்டாமல் விடமாட்டார்கள் போல எனவே ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.

என்றால் சில வாரங்களாக இந்த சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது எனவே இன்னும் ஒரு வாரத்தில் இந்த சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் காத்து வந்த நிலையில் மேலும் சவ்வு போல் இழுத்து வருகிறார்கள். எனவே விரைவில் இந்த சீரியல் முடியும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.