மீண்டும் கதையை சவுப்போல் இழுக்கும் பாரதி கண்ணம்மா இயக்குனர்.! கடுப்பான ரசிகர்கள்..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் விரைவில் முடியும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது ஒரே கதையை மையமாக வைத்து மீண்டும் உருட்டி வருகிறார்கள். அதாவது பாரதி மற்றும் வெண்பா இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் அதனை தடுத்து நிறுத்தி வெண்பா மற்றும் ஹேமா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு வெண்பா வேண்டும் என்றே மாடியில் இருந்து கீழே விழுந்து கருவை கலைக்க வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்துவிடுகிறது இதனை பார்த்த பிறகு கண்ணம்மாவின் மேல் எந்த தவறும் இல்லை ஹேமா, லக்ஷ்மி தன்னுடைய மகள்கள் தான் என தெரிந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க செல்கிறார்.

மேலும் ஹேமா தன்னை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுமாறு கூறி அழ பிறகு கண்ணம்மா நீ என்னுடைய மகள்தான் என அனைத்து உண்மைகளையும் கூறிவிடுகிறார். பிறகு ‌ ஹேமா கண்ணம்மாவின் வீட்டிற்கு செல்கிறார் அம்மா, அப்பா இல்லையே என்று நினைத்துக் கொண்ட ஹேமாவுக்கு இது பெரிய ஆறுதலாக இருக்கிறது.

இவ்வாறு கண்ணம்மாவும் தன்னுடைய இரு மகள்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது கண்ணம்மாவை தேடி சென்ற பாரதி ஹேமா உனக்கு பிறந்த குழந்தையாக இருக்கட்டும் அதையெல்லாம் பற்றி பேச நான் இப்பொழுது வரவில்லை அவள் பிஞ்சு குழந்தையாக இருக்கும் பொழுதே நான் அவளை தூக்கி வளர்த்தேன்.

ஒரு நாள் கூட என்னால் ஹேமாவை விட்டு பிரிந்து இருக்க முடியாது தற்பொழுது ஹேமாவை தன்னிடம் அனுப்பிவை என பாரதி கண்ணம்மாவிடம் கெஞ்சுகிறார். இவ்வாறு கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடியும் என்று பார்த்தால் மறுபடியும் ஒரே கதையை ஜவ்வு போல் இழுத்து வருகிறார்கள்.