விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் வெண்பா பாரதியின் மனதை மாற்றி எப்படியோ இவர்களுடைய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். பாரதியும் வெண்பாவிற்கு திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துள்ள நிலையில் வேறு வழியில்லாமல் கோவிலுக்கு வருகிறார்.
மேலும் இந்த நேரத்தில் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தவரிடம் போன் வருகிறது அப்பொழுது அவர் இன்னும் இரண்டு நாளாகும் எனக் கூற இதற்காக பாரதி இப்பொழுது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் இன்னும் இரண்டு நாள் கழித்து கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என வெண்பாவிடம் கூறுகிறார். ஆனால் பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் வலுக்கட்டாயமாக இழுத்து அவர் கையால் தாலி கட்ட பார்க்கிறார்.
இந்த நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பதறி அடித்துக் கொண்டு கோவிலுக்கு வருகிறது அப்பொழுது தன்னுடைய கணவர் மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள துணிந்ததை பார்த்து கண்ணம்மா வெண்பாவை ஓங்கி அறைகிறார். பிறகு பாரதியின் கழுத்தில் இருக்கும் மாலையை பிடுங்கி எருகிறார் முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்வியா என கத்துகிறார்.
இந்த நேரத்தில் கோவிலில் இருப்பவர்கள் அனைவரும் வெண்பாவை கேவலமாக பார்க்க அந்த நேரத்தில் சௌந்தர்யாவும் மிகவும் கேவலமாக திட்டுகிறார். அதன் பிறகு கோவிலில் வெண்பா மற்றும் ரோஹித் இருவருக்கும் அங்கு இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள் எனவே இதற்கு மேல் வெண்பாவின் தொந்தரவு பாரதிக்க இருக்காது.
இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வரப்போகிறது அப்பொழுது கண்ணம்மாவின் மீது எந்த தவறும் இல்லை உணர்ந்து மிகவும் சந்தோஷமாக பாரதியை கண்ணம்மாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார் பிறகு தன்னுடைய மனைவியிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறார். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வீட்டிற்குள் வர குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து இன்ப அதிர்ச்சி அடைகிறார்கள்.