விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது அதாவது லட்சுமி பாரதியிடம் நீங்கள் தான் என்னுடைய அப்பா என்று சொன்னதால் கடுப்பான பாரதி ஹேமாவை வேறு ஸ்கூல் சேர்க்க முடிவு எடுத்துள்ளார். ஏனென்றால் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் லட்சுமி ஹேமாவிடம் உண்மையை சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இவ்வாறு முடிவு எடுத்துள்ளார்.
எனவே தற்பொழுது இதே ஸ்கூலில் தான் ஹேமா படிக்க வேண்டும் என பாரதியிடம் கண்ணம்மா சவால் விடுகிறார். இந்நிலையில் தற்பொழுது மிகவும் உணர்ச்சிப்படம் பேசும் ப்ரோமோ வெளியாகி உள்ளது அதாவது பாரதி ஹேமாவை அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு வருகிறார். ஏனென்றால் டிசி வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி பாரதியை பார்க்கிறார் மேலும் பாரதியிடம் சென்று ஹேமாவை இந்த ஸ்கூலில் படிக்க வையுங்கள் என கெஞ்சுகிறார் ஆனால் அதை கொஞ்சம் கூட கவனிக்காத பாரதி காதில் வாங்காமல் அங்கிருந்து ஆபீஸ் ரூமுக்கு சென்று ஹேமாவின் டீசியை வாங்கிக் கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்.
இதனை பார்க்க முடியாமல் பாரதி கடைசியில் மனம் மாறி டீசியை கிழித்து விடுகிறார் இதனை தூரத்தில் நின்று கண்ணம்மா பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.மேலும் இதே போல் மீண்டும் பழையபடி கதையை உருட்ட இருக்கிறார் இயக்குனர். ஒருபுறம் வெண்பாவிற்கு திருமணம் நடக்க இருக்கும் நிலையில் பாரதி கண்ணம்மாவின் மீது எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தால் இந்த சீரியல் முடிந்து விடும் ஆனால் அதனை செய்யாமல் உருட்டின கதையைவே வைத்து உருட்டி வருகிறார்கள்.