அடுத்ததாக வெண்பாவை குறி வைத்த சௌந்தர்யா.! கண்ணம்மா எடுத்த முடிவு.. பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்

bharathi-kannama-1
bharathi-kannama-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் பல வருடங்களாக ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்பொழுது முடிவுக்கு வர இருக்கிறது.

இன்றைய எபிசோடில் வீட்டில் சௌந்தர்யா,அகிலன் மற்றும் சௌந்தர்யாவின் கணவர் என மூவரும் அமர்ந்து பங்க்ஷனில் நடந்த பிரச்சனைகளை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அகிலன் வெண்பா பற்றி கண்ணம்மா சொன்ன விஷயத்தை பேச சௌந்தர்யா இந்த விஷயத்தை கண்ணம்மா அன்னைக்கே சொல்லி இருந்தா அந்த வெண்பாவை கொன்னு இருப்பேன்.

இனிமேல் அவளை சும்மா விட போவதில்லை என கூறி வருகிறார். இவ்வாறு சௌந்தர்யா வெண்பாவின் மேல் மிகவும் கோபமாக இருந்து வரும் நிலையில் கண்ணம்மாவை கொலை செய்ய முயற்சித்த வெண்பாவை சும்மா விடக்கூடாது என்ற முடிவில் இருந்து வருகிறார் எனவே கண்டிப்பாக வெண்பாவை ஏதாவது சௌந்தர்யா செய்வார்.

பிறகு பாரதி தனது குடும்பத்தின் மேல் கோபமாக இருந்து வரும் நிலையில் ஹேமாவிற்கு தலை வாரி விடுவது, சாப்பாடு ஊட்டுவது என அனைத்து வேலைகளையும் தானே செய்து வருகிறார் நான் ஹேமாவிற்கு தலை வாரி விடுகிறேன் என சௌந்தர்யா கூறிய பிறகும் பாரதி வேண்டாம் என தவிர்த்து விட்டார்.

மேலும் பாரதி ஹேமாவை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்லும் வழியில் பாரதியிடம் ஹேமா தாத்தா பாட்டியிடம் சண்டை போட்டு விட்டீர்களா என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை என கூறுகிறார். இவர் ஹேமா தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் பாரதி கொஞ்சம் நேரம் அமைதியா வா என கூறுகிறார்.

இந்த நேரத்தில் தற்பொழுது ஸ்கூலில் பேலன்ஸ் மீட்டிங் என்பதால் கண்ணம்மாவை லட்சுமி அழைக்க என்னால் ஹாஸ்பிடலில் பர்மிஷன் போட முடியாது நான் மிஸ்கிட்ட போனில் பேசிக் கொள்கிறேன் என கூறுகிறார் பிறகு லட்சுமியை சமாதானப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்புகிறார். பிறகு இதற்கு மேல் ஹேமாவை பாரதி லட்சுமியிடம் பேச விடுவாரா என்பது தெரியவில்லை.