குடும்பத்தினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாரதி.! ஹேமா விஷயத்தில் அவர் எடுத்துள்ள முடிவு இதுதான்.. விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல்

bharathi-kannama-24
bharathi-kannama-24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்பொழுது கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகி வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய எபிசோடில் பிறந்தநாள் பங்க்ஷன் முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அப்பொழுது வீட்டில் லைட் போடாமல் மிகவும் இருட்டாக இருப்பதை பார்த்த சௌந்தர்யா பாரதி நமக்கு முன்னாடியே வந்துட்டானே ஆனால் லைட் எரியல வரல போல என கூறிக் கொண்டிருக்கும் பொழுது மின்னல் ஒளியில் பாரதி தனியாக உட்கார்ந்து இருட்டில் அழுது கொண்டிருப்பதை பார்த்த குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறகு அனைவரும் பாரதியின் பக்கத்தில் வந்த உக்கார பாரதி எனக்கே தெரியாமல் இத்தனை வருஷமா என்னை ஏமாத்திகிட்டு இருந்திருக்கிறீர்களா எனக்கு யார் துரோகம் செஞ்சாலும் மறந்து மன்னிச்சிடுவேன் ஆனால் என்னுடைய அம்மா,அப்பா, கூட பொறந்த தம்பி என ரத்த சொந்தமே இப்படி துரோகம் செய்து இருக்கலாம் என்ன பண்ணுவது.

இப்ப நான் எல்லாருக்கும் சொல்றேன் கேட்டுக்கோங்க ஹேமா என்னுடைய பொண்ணு அதுல எந்த மாற்றமும் கிடையாது. என்கிட்ட இருந்து ஹேமாவ யாராவது பிரிக்கணும்னு நினைச்சா அந்த நாள் இந்த உலகத்தில் நான் வாழுற கடைசி நாளாக இருக்கும். இப்பவே என் பொண்ண கூட்டிட்டு இந்த உலகத்துல கண் காணாத இடத்தில போய் என்னால முடியும்.

ஆனா அவன் இந்த வீட்டில் இருக்கிற எல்லோர் மேலயும் மிகவும் பாசமாக இருக்கிறாள், அவளுக்கு தாத்தா,பாட்டி, சித்தப்பா, சித்தி ஆனா எல்லோரும் வேணும் அதற்காக மட்டும் தான் இருக்கிறேன், பாரதி நீங்க பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்தப் பக்கம் லட்சுமி கண்ணம்மாவிடம் அந்த புகைப்படத்திலிருந்து உண்மையிலுமே ஹேமாவின் அம்மா தானா என கேட்கிறார்.

எனவே கோபமடைந்த கண்ணம்மா நாளைக்கு பரீட்சையில் ஹேமாவின் அம்மாவை பற்றி தான் கேட்க போறாங்களா என கோபமாக கூற லட்சுமி அம்மா இப்படி எல்லாம் பேச மாட்டாங்களே ஏதோ இருக்குது என கூற யோசிக்கிறார். பாரதி ஹேமா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்து நீ இல்லாம வாழ முடியாது யாருக்காகவும் உன்னை விட்டு தர மாட்டேன் என்ன கூறுகிறார். பிறகு ஹேமா தூக்கத்தில் தன்னுடைய அம்மா அழகாக இருந்ததாகவும் அதை காமித்த அப்பாவுக்கு மிகவும் நன்றி எனவும் கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.