விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்து ஒரு கட்டத்திற்கு பிறகு ரசிகர்கள் எப்பொழுது இந்த சீரியலை இழுத்து மூடியுங்கள் என கேட்கும் நிலமைக்கு தள்ளப்பட்ட சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் தனது மனைவி ஒழுக்கம் கெட்டவள் என பாரதி கண்ணம்மாவை வீட்டை விட்டு அனுப்பிய நிலையில் தற்பொழுது வரையிலும் 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் கண்ணம்மா ஒழுக்கமானவள் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் பாரதி கண்ணம்மாவின் மீது கோபமாக இருந்து வரும் நிலையில் இந்த ஒரே கதையை தான் பல மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஹேமாவும் கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைதான் என்ற உண்மை பாரதிக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஹேமா மற்றும் லட்சுமியின் பிறந்தநாள் அன்று அனைவர் முன்பும் கண்ணம்மா உண்மையை போட்டு உடைத்தார். எனவே இதனை ஏற்றுக் கொள்ளாத பாரதி சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைதான் ஹேமா என்பதை கூறிவிட்டார்.
இப்படிப்பட்ட நிலையில் ஹேமா இத்தனை வருடங்களாக தனது அம்மாவை பிரிந்து வந்த நிலையில் அவர் தனது அம்மாவுடன் வாழ வேண்டும் எனக் கூறிய அழுகிறார். எனவே பாரதியும் சௌந்தர்யாவிடம் ஹேமா மிகவும் பாவம் அவளை கண்ணம்மாவின் வீட்டில் விட்டு விடுங்கள் என கூறுகிறார் சௌந்தர்யா நீயும் வந்து அவளை கண்ணம்மாவின் வீட்டில் விட்டுவிட்டு வா என கூறுகிறார்.
இதோடு இன்றைய எபிசோடு முடிய உள்ள நிலையில் விரைவில் பாரதி கண்ணம்மா சீரியல் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது மேலும் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலைகள் பாரதியும் ஹேமா மற்றும் லட்சுமிக்காக மனம் மாறி கண்ணம்மாவுடன் வாழ ஒப்புக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.