விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் தற்பொழுது எதிர்பாராத பல விறுவிறுப்பான கதைகளங்கள் அறிமுகமாகி வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பாரதி பணியாற்றி வரும் மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
எனவே மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் போலீசர்கள் பலரும் உள்ளார்கள் மேலும் மருத்துவ பராமரிப்பு பணியாளராக கண்ணம்மா பணியாற்றி வரும் நிலையில் பல நபர்கள் மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள். எனவே இதனை அறிந்துக் கொண்ட கண்ணம்மா அவர்களை தாறுமாறாக பல கேள்விகளை கேட்கிறார்.இதனால் அவர்கள் தீவிரவாதிகள் என்பதை தெரிந்துக் கொண்டு போலீஸ்சார்களிடம் சொல்ல முயற்சி செய்கிறார்.
மேலும் முழு மருத்துவமனையையும் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.அங்கு அகிலன்,அஞ்சலி, லட்சுமி ஆகியோர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனை அறிந்து கொண்ட பாரதி போலீஸ் அதிகாரிகளுடன் மருத்துவமனைக்குள் நுழைகிறார். தீவிரவாதிகள் இவர்கள் இருவரையும் தனி அறைக்குள் கொண்டு சென்ற அடைகின்றார்கள்.
மேலும் அங்கு துப்பாக்கி சூடு சத்தமும் கேட்கிறது இதனால் பாரதியை தீவிரவாதிகள் கொன்று விட்டார்கள் என நினைத்துக் கொண்டு லட்சுமி கதறி அழுகிறார்.பிறகு அங்கு இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இவ்வாறு இந்த தகவல் அனைவருக்கும் தெரிய வர பாரதியின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பதறுகிறார்கள்.பிறகு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தப்பித்து தீவிரவாதிகளை போலீசாகளிடம் ஒப்படைக்கிறார்கள்.
இதன் காரணமாக அனைவரும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்து விடுவதால் பாரதி மற்றும் கண்ணம்மாவை பாராட்டுகிறார்கள். மேலும் இவர்களுக்கு இதற்காக விருதுகளும் தரப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை காப்பி அடித்து இவர்கள் இந்த எபிசோடை உருவாக்கியுள்ளார்கள் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.