விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பாரதி பணியாற்றி வரும் மருத்துவமனையின் ஓனர் விக்ரம் பாபு ஹாஸ்பிடல் தற்பொழுது சென்ட்ரல் மினிஸ்டர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவே அதற்காக ஏராளமான போலீசார்களும் குவிந்துள்ளார்கள்.
இந்நிலையில் சென்ட்ரல் மினிஸ்டரை பணய கைதியாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திடம் தங்களுடைய நான்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் தீவிரவாதிகள் ஹாஸ்பிடலில் ஏசி சரி பார்ப்பவர்களுகவும், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற கெட்டப்பிலும் நுழைகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் அங்கு அட்மிஷன் ஆபீஸராக பணியாற்றி வரும் கண்ணம்மா ஐபிஎஸ் அளவிற்கு தீவிரவாதிகளிடம் ஹாஸ்பிடலில் பல கேள்விகளை கேட்டு பிறகு தீவிரவாதிகள் தான் இவர்கள் என கண்டுபிடிக்கிறார் இதனை போலீஸிடம் கண்ணம்மா தெரிவிக்க பதறி அடித்து ஓடும் பொழுது தீவிரவாதிகள் ஹாஸ்பிடல் முற்றுகையிட்டு போலீசார்களை சுட்டுக் கொள்கின்றனர்.
மேலும் மருத்துவமனையில் கண்ணம்மாவுடன் கண்ணம்மாவின் மகள் லட்சுமி, அகிலன், அஞ்சலியன பாரதியின் குடும்பத்தினர்கள் சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் இதனை நினைத்து சௌந்தர்யா கலங்குகிறார் பிறகு உடனே அவர்களை எப்படியாவது மீட்டு வருகிறேன் என பாரதி கிளம்புகிறார் அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு உள்ளே இருந்து கொண்டு தீவிரவாதிகளின் கண்ணில் மண்ணை தூவ வெளியில் இருந்து பாரதி கண்ணம்மாவுக்கு உதவி செய்கிறார்.
பிறகு பொதுமக்கள் மற்றும் பேஷண்ட் அனைவரையும் பாரதி கண்ணம்மா இருவரும் சேர்ந்து காப்பாற்றியதால் இவர்களுக்கு அரசு சார்பில் விருது கொடுக்கப்படுகிறது. இவ்வாறு இந்த சீரியலை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இயக்குனர் திரைப்படங்களின் காட்சிகளை தொடர்ந்து காப்பி அடித்து வருகிறார். இதன் காரணமாக ரசிகர்களும் தொடர்ந்து தங்களால் முடிந்தவரை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.