தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றாக வளம் வந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
இன்றைய எபிசோடில் ஹேமா மற்றும் லட்சுமி இருவருக்கும் பிறந்தநாள் விழா நடைபெறகிறது. எனவே லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ஹேமா தனக்கு சித்தப்பா,சித்தி, தாத்தா,பாட்டி என எல்லோரும் கிப்ட் கொடுப்பாங்க என்ன சந்தோஷமாக சொல்கிறார். மேலும் டாடி மூணு டிரஸ் எடுத்துக் கொடுத்தார் என சொல்கிறார் இவனை கேட்ட லட்சுமி வருத்தப்படுகிறார்.
ஹேமா உனக்கு யார்? யார்? என்ன கிப்ட் கொடுத்தாங்கன்னு கேட்க்க எனக்கு எங்க அம்மா காலையில கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தாங்க அதைவிட பெரிய கிப்ட் எதுவுமே இல்லை என்ன சொல்கிறார். அம்மா இல்லை என்ற காரணத்தினால் ஹேமா வருத்தப்படுகிறார்.
இந்த பக்கம் பாரதி ஹாஸ்பிடலில் இருக்கிற அப்பொழுது வெண்பா போன் செய்து உன் வீட்டு பங்க்ஷனுக்கு என்ன ஒரு வார்த்தை கூட கூப்பிடல என பேசிகிறார் அதற்கு பாரதி அன்னைக்கு உன் வீட்டுக்கு ஃபங்ஷன்ல உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்லை சொன்ன எனவே எந்த முகத்த வச்சுக்கிட்டு கூப்பிடுறது என பாரதி சொல்கிறார்.
பிறகு சரி நீ கண்டிப்பா பங்க்ஷனுக்கு வரணும் என கூறுகிறார். ஹேமாவின் அம்மா யார் என்று சொல்லப் போறியா யாரை சொல்ல போற கண்ணம்மாவையா? என கேட்கிறார். ஆனால் பாரதியார் அதை எல்லாம் ஃபங்ஷனில் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லி போனை வைத்து விடுகிறார். பிறகு ராஜா ராணி குடும்பத்தினர்கள் ஃபங்ஷன் இருக்கு வர பாரதி கண்ணம்மா குடும்பத்தினர்கள் மகிழ்ச்சியாக அனைவரையும் வரவேற்கிறார்கள்.
பிறகு அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெண்பா என்ட்ரி கொடுக்கிறார் என் வீட்டு பங்க்ஷன்ல வந்து என்ன ஆட்டம் போட்டிங்க என எல்லோரையும் கலாய்த்து விட்டு தன்னை பாரதி தான் வர சொன்னதாக கூறுகிறார். அனைவரும் வெண்பாவை எங்கு ஹேமாவின் அம்மா என பாரதி சொல்லிவிடுவாரோ என பயப்படுகிறார்கள் இன்று அரை மணி நேரம் எபிசோடு முடிவடைகிறது.