திருமணம் கோலத்தில் மாலையை மாற்றி விளையாடும் வெண்பா-பாரதி.! தலையில் துண்டை போட்டு கிளம்பிய கண்ணம்மா..

bharathi-kannama
bharathi-kannama

தமிழ் சினிமா திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா தற்பொழுது கண்ணம்மாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என வெண்பாவின் அம்மா ஷர்மிளா அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

இதன் காரணமாக வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது மேலும் இந்த நிச்சயதார்த்தத்தில் பாரதியின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் மீண்டும் பாரதியை காதலிக்கிறேன் என அனைவர் முன்பும் வெண்பா கூறிய நிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

மேலும் கொஞ்சம் விளையாடுகிறார்கள் இதற்கு ஏன் பாரதி ஒப்புக்கொண்டார் என பெரிய எதிர்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது மேலும் கண்ணம்மாவின் சோலி முடிந்து விட்டது என வெண்பா பாரதியவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது போல் கனவு காண்கிறார்.

இதன் காரணமாக ரோஹித் தான் பாரதி என்று நினைத்துக் கொண்டு உண்மையிலேயே நான் மீது காதல் வைத்துள்ளார் வெண்பா இத்தனை நாளாக சும்மாதான் நடித்துள்ளார் என ரோஹித் மகிழ்ச்சியடைகிறார் அதன் பிறகு வெண்பா கனவில் இருந்து விழித்து பார்த்தால் ரோஹித் இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு வெண்பா அம்மாவிடம் ரோகித்தை எனக்கு பிடிக்கவில்லை யாருமே இல்லாத ஒரு அனாதையை திருமணம் செய்து கொள்ள முடியாது ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த பையனை தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் எனக் கூற உடனே சௌந்தர்யா நல்ல குடும்பப் பையனாக இருந்தால் திருமணம் செய்து கொள்வாயா என கேட்கிறார் அதற்கு வெண்பா சரி என சொல்ல கொஞ்சம் கூட யோசிக்காமல் ரோஹித்தை தனது மகனாக தடுத்து‌ கொள்கிறார் சௌந்தர்யா.