விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா தற்பொழுது கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கணவன் மனைவியாக பாரதி கண்ணம்மா பிரிந்து வரும் நிலையில் வெண்பாவின் சதி திட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு வெண்பாவின் ஆட்டத்தை அடக்க சௌந்தர்யா முடிவெடுத்துள்ளார்.
இதனால் அம்மாவிடம் வெண்பா ரோகித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்த சொல்லியிருந்தார் இதனை மறுப்பு தெரிவித்த வெண்பாவை வெண்பாவின் அம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் படும் கேவலமாக நடத்தி வந்தார்கள். மேலும் நிச்சயதார்த்தத்துக்கு ஒத்துக்கவில்லை என்றால் மறுபடியும் சிறைக்கு சென்று கலி தின்ன வைத்து விடுவேன் என வெண்பாவின் அம்மா திட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து மறுபுறம் சௌந்தர்யா வெண்பாவை கட்டிப்பிடித்து அன்போடு சொல்லும் போல் மிரட்டுகிறார். அதாவது கண்ணம்மாவை பிரசவத்தின் போது கொலை செய்ய முயற்சித்த சதி திட்டங்களை கூறி அனைத்தையும் போலீசாரில் புகார் அளித்து ஜெயிலில் தள்ளி விடுவேன் ஒழுங்கு மரியாதையாக நிச்சயதார்த்தத்திற்கு அமைதியாக நடத்துவதற்கு ஒப்புக்கொள் என கூறிவிட்டு முதுகிலேயே வெண்பாவை சௌந்தர்யா குத்துகிறார்.
இதனால் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் வெண்பா தன்னுடைய முகத்தில் காட்டுகிறார். இவ்வாறு நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் பெரிய குடும்பத்தில் இருக்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசைப்படுகிறேன் அனாதை போல் இருக்கும் ரோகித்தை எனக்கு பிடிக்கவில்லை என திடீரென எழுந்து கத்துகிறார்.
உடனே ரோகித்தை சௌந்தர்யா தன்னுடைய மகனாக ஏத்து எடுத்துக் கொண்டு தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார். பிறகு அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேறு வழி இல்லாமல் வெண்பா நிச்சயதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறார் இவ்வாறு வில்லியாக கலக்கி வந்த வெண்பாவின் கையை கட்டிப்போட்டு உள்ளார் சௌந்தர்யா.