விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பத்து வருடங்களாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்வதற்கு முக்கிய காரணமே வெண்பாதான்.
இவருடைய பல சதி திட்டங்களால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் மேலும் கடைசியில் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என தெளிவாக கூறிவிட்டார்.இதனால் வெண்பாவின் அம்மா ரோகித் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்தார் எனவே நிச்சயதார்த்தமும் செய்துவிடலாம் என்று ஷர்மிளா முடிவு செய்து இருந்தார்.
மேலும் இவர் உதவியாக சௌந்தர்யா இருவரும் இணைந்து மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடியப்போகும் நேரத்தில் வெண்பா மேடையில் இருந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். அனாதை மாறி இருக்கிற ரோஹித்தை திருமணம் செய்து கொள்ள முடியாது நல்ல பெரிய குடும்பத்தில் இருக்கிற மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்புகிறேன் என ரோகித்தை சபையில் அனைவரும் முன்பும் அசிங்கப்படுத்துகிறார்.
தலை குனிந்து நிற்கின்ற காதலன் ரோகித் வெண்பாவின் பேச்சால் அவமானப்பட்டு நிற்கிறார் மேலும் இதுவும் பேசாமல் அப்படியே இருந்து வரும் நிலையில் உடனே சௌந்தர்யா ரோகித்துக்கு சாதகமாக பேசுகிறார் அதாவது மேடையில் ஏறி ரோகித் என் குடும்பம் தான் நாங்கள் அனைவரும் என சௌந்தர்யா பாரதி, கண்ணம்மா, அகிலன் என அனைவரும் ரோகித்தை உறவாக ஏற்றுக் கொண்டனர். அதற்கு பிறகு பதில் பேச முடியாமல் வெண்பா அமைதியாக அமர்ந்து விடுகிறார்.
ஒருவழியாக வெண்பா ரோஹித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிகிறது இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது எப்படியோ சௌந்தர்யா வெண்பாவின் வில்லத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தற்பொழுது சௌந்தர்யாவின் கணவர் வேணுவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ரத்த வாந்தி எடுக்கும் விஷயத்தை சௌவுந்தர்யாவிற்கு தெரியாமல் அப்படியே வைத்து வருகிறார் இவ்வாறு பரபரப்பான எபிசோடுகள் உடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.