பாரதி போட்ட பிளானால் கவலையில் லக்ஷ்மி.! நான் ஒரு பிராடு, பிச்சைக்காரன் என ஷர்மிளாவிடம் கூறும் ரோஹித்..

bharathi kannama1
bharathi kannama1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா தற்பொழுது ரோஹித் அப்பாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் என கூற ஷர்மிளா மிகவும் அதிர்ச்சி அடைகிறார் ஆனால் வெண்பா மகிழ்ச்சி அடைகிறார்.

என்ன மாப்ள சொல்றீங்க ஏன் இப்படி எல்லாம் சொல்றீங்க என கேட்க பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் எடுத்து ரோகித் இப்போதைக்கு என் கிட்ட இது தவிர வேறு எதுவும் இல்லை நான் ஒரு பிச்சைக்காரன் என கூற நான் இருக்கும்போது நீங்க எதுக்கு இப்படி சொல்றீங்க என மாப்பிள்ளை என கூறிவிட்டு ஷர்மிளா இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து இதை அந்த பாக்கெட்டில் வச்சுக்கோங்க என கூறுகிறார்.

இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார் நான் ஒரு பிராடு என சொல்ல ஷர்மிளா எனக்கு மாப்பிள்ளை பற்றி தெரியும் என கூறுகிறார்.அதன் பிறகு வீட்டில் ஹேமா ஸ்கூலுக்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில் பாரதி இன்றைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம் என சொல்கிறார் நீ வீட்ல தான் இருக்கணும் என கூறுகிறார். வீட்டில் எல்லோரும் இது பற்றி கேட்க அவர்களிடம் கோபமாக பேசி விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி விடுகிறார்.

லக்ஷ்மி ஹேமாவிற்கு காத்திருந்து பிறகு ஹேமா வராதா காரணத்தினால் ஏமாந்து போகிறார் அதன் பிறகு வேணும் மீண்டும் இருமல் வந்து ரத்த வாந்தி எடுக்க சௌந்தர்யாவுக்கு தெரியக்கூடாது என கதவை லாக் செய்து டிவியை சத்தமாக வைத்துக் கொள்கிறார். பிறகு சௌந்தர ரூமுக்கு வந்து என்ன ஆச்சு என கேட்க எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார்.லக்ஷ்மி கண்ணம்மாவை பார்க்க போன இடத்தில் ஹேமா ஸ்கூலுக்கு வரவில்லை என சொல்ல கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை கேட்க இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

லட்சுமி பாரதி தான் என்னுடைய அப்பா என்ற உண்மையை ஹேமாவிடம் சொல்லிவிடுவாள் என்பதற்காக தான் அவர் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என சொல்லிவிட்டு கண்ணம்மா போனை வைத்து விடுகிறார் பிறகு பாரதியிடம் நேராக பேசிக் கொள்ளலாம் என கண்ணம்மா முடிவெடுக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.