ஹேமாவிடம் தனது அப்பா பற்றிய உண்மையை கூறிய லட்சுமி.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல்..

bharathi-kannama
bharathi-kannama

bharathi-kannamaவிஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா இன்று வெளியாக உள்ள எபிசோடு லட்சுமியின் வீட்டிற்கு வந்த பாரதி தனக்காக பேசாததை நினைத்து வருத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனைப் பற்றி ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

எனவே கண்ணம்மா உனக்கு என்னமா ஆச்சு என கூறி அனைத்து விஷயங்களையும் கேட்கிறார் பிறகு நான் அப்பாகிட்ட கோபத்தில் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டேன் நான் பண்ணது தப்புதான் இனிமே அப்படி பண்ண மாட்டேன் என கண்ணம்மாவிடம் கூறுகிறார் இனி அவரை நீ எங்க பார்த்தாலும் அப்பானு கூப்பிடு நீயும் எவ்வளவு நாளைக்கு தான் பொறுமையாக இருப்ப அது உன்னுடைய உரிமை எனக் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து லட்சுமி ஹேமாகிட்டையும் பாரதி தான் என்னுடைய அப்பா என்ற விஷயத்தை சொல்லி விட வேண்டியது தான் என நினைத்து மறுநாள் ஸ்கூலில் ஹேமாவிடம் தன்னுடைய அப்பா யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி எனக்கு தெரியும் என சொல்ல ஹேமா ரொம்ப சந்தோஷப்படுகிறாள் பிறகு ஹேமாவும் மிகவும் ஆர்வமுடன் யார் எனக்கு கேட்க பாரதி டாக்டர் தான் என்னுடைய அப்பா எனக்கும் அப்பா என சொல்ல நீ சொல்றது உண்மையா என ஹேமா கேட்கிறார்.

ஆமா, சௌந்தர்யா தான் என்னுடைய பாட்டி, பிறகு சித்தப்பா, சித்தி, தாத்தா என எல்லோரும் எனக்கும் சொந்தக்காரர்கள் எனக் கூறுகிறார் இந்த நேரத்தில் சௌந்தர்யா, கண்ணம்மா இருவரும் வருகிறார்கள் உடனே சௌந்தர்யாவிடம் ஹேமா இதனை பற்றி கேட்கிறார் பிறகு சௌந்தர்யாவும் ஆமாம் என கூறிவிட்டு கண்ணம்மா தான் உன்னுடைய அம்மா போட்டோவில் காட்டியது உன்னுடைய அம்மா இல்லை எனக் கூறுகிறார் அதன் பிறகு பார்த்தால் பாரதி தூக்கத்தில் இருந்து அலறி எழுந்து கொள்கிறார்.

இவ்வாறு பாரதி அனைத்தையும் கனவில் காண்கிறார் மேலும் எப்படியாவது ஹேமாவை கண்ணம்மா மற்றும் லட்சுமி இடம் பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். இவ்வாறு ஒரு பக்கம் நடக்க மற்றொரு பக்கம் ரோஹித் போனில் தன்னுடைய அப்பாவிடம் பேசுவது போல் பேசிவிட்டு எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்னுடைய அப்பா வேறு இடத்தில் பொன்னை பார்த்து விட்டாராம் அதாவது சென்டரல் மினிஸ்டர் பொண்ணு பார்த்து இருப்பதாக கூறுகிறார் என சொல்ல உடனே சௌந்தர்யா இப்ப என்ன பண்ணுவது என கேட்க கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என கூறுகிறார்.பிறகு வெண்பா இதனால் மகிழ்ச்சியடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.