விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்கள் ஒன்று தான் பாரதி கண்ணம்மா தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியல் முடிவு உள்ள நிலையில் ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி வருகிறது.
சிவகாமியின் வீட்டிற்கு கண்ணம்மா மற்றும் பாரதி சென்றிருந்த நிலையில் அங்கு நடந்த பல பிரச்சனைகளை தாண்டி அனைவரும் நிம்மதியாக இருந்தார்கள் இந்த நேரத்தில் சிவகாமிக்கு நஞ்சுவலி ஏற்பட பாரதி சென்னைக்கு அழைத்து செல்லலாம் என கூறியதால் ராஜா ராணி குடும்பத்தினர்கள் அனைவரும் சென்னைக்கு வந்துள்ளார்கள்.
தற்போது சிவகாமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பாரதி கூறிய நிலையில் ஹேமா அங்கு என் அம்மாவை காமிங்க, என் அம்மாவை பார்க்க வேண்டும் என மிகவும் வருத்தமாக கேட்கும் நிலையில் பாரதி உன் பிறந்தநாள் பரிசாக உன் அம்மாவை உனக்கு காட்டுகிறேன் என்று கூறுகிறார்.
எனவே சௌந்தர்யா மகிழ்ச்சியில் உள்ள நேரத்தில் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்றவுடன் சௌந்தர்யா ஹேமாவின் பிறந்தநாள் அன்று அவளுடைய அம்மாவை காட்டு போவதாக பாரதி கூறியது உனக்கு சந்தோஷமாக இல்லையா என கண்ணம்மாவிடம் கேட்கிறார். அதற்கு கண்ணம்மா அவர் சும்மா கூட சொல்லி இருக்கலாம் இல்ல எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கையே இல்லை என கூறுகிறார்.
ஆனால் ஹேமாவின் அம்மா வேறு ஒருவர் என காண்பித்தால் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் உங்க வீட்ல ஒரு கொலை விழும் என கூறுகிறார் பிறகு பெத்த அம்மா நான் இருக்கும் பொழுது இப்பவே அவ உங்களோட வளர்ந்துட்டு இருக்கா என கோபமாக பேசுகிறார் கண்ணம்மா இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.