விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வந்த தகவல் வெளியாக இருக்கும் நிலையில் அதனை கொண்டாடி வருகின்றனர் அதாவது விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.
இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்கள் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என காத்து வந்தனர் அந்த வகையில் சில மாதங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்னும் சில நாட்களில் முடியை இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாரதிக்கு தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் மறந்திருந்த நிலையில் கண்ணம்மா தன்னுடைய முயற்சியினால் மீண்டும் பாரதியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார் மேலும் பாரதிக்கு ஃபாரினில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் அங்கு செல்ல முடிவெடுத்தார்.
கண்ணம்மா தன்னுடைய குழந்தைகளிடம் சொல்லிவிட்டு பாரத கிளம்ப அப்பொழுது ஹேமா லக்ஷ்மி இருவரும் அப்பாவுடன் சென்று விட்டு நாளை வருகிறோம் என கூறினார். அதன் பிறகு கண்ணம்மாவிற்கு தாமரை அறிவுரை கூறிய நிலையில் கண்ணம்மா ஓடி வந்து பாரதி போவதை நிறுத்தினால் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்திய நிலையில் தற்பொழுது இந்த தம்பதியினர்களுக்கு திருமணம் நடத்த ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
எனவே திருமணத்திற்கு தேவையான டிரஸ்கள் எடுக்க போகும் நேரத்தில் பாரதி கண்ணம்மாவிற்கு மட்டும் முகூர்த்த புடவை எடுக்க வேண்டாம் என கூறுகிறார் உடனே பாரதி நெசவு செய்யும் ஒருவரின் வீட்டிற்கு சென்று தன்னுடைய மனைவிக்காக புடவை நைகிறார். இவ்வாறு இந்த சீரியல் விரைவில் முடிய இருக்கிறது.