விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் டிஆர்பியில் முன்னணி வகித்து வந்த இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வேறுப்பினை சம்பாதித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை என ஒத்துக் கொண்ட நிலையில் பிறகு கண்ணம்மாவை சமாதானப்படுத்தி எப்படியாவது ஒன்று சேர வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.
எனவே இவர்கள் தற்பொழுது கிராமத்தில் வாழ்ந்து வரும் நிலையில் பாரதி கண்ணம்மா மற்றும் தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டுதான் இந்த கிராமத்தில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இனி வரும் எபிசோடில் பாரதி என்னை பற்றி ஒருநாள் நினைக்காமல் இருந்து விட்டால் சொல் நான் இந்த கிராமத்தை விட்டு உடனே செல்கிறேன் என கண்ணம்மாவிடம் சவால் விடுகிறார்.
கண்ணம்மாவும் அந்த சவாலை ஏற்றுக் கொண்ட நிலையில் பிறகு ஒரு நாள் கழித்து பாரதியை சந்திக்கிறார் அப்பொழுது உங்கள் ஞாபகம் எனக்கு வரவே இல்லை எனவே இந்த ஊரை விட்டு கிளம்புங்கள் என கூற பாரதி சிரிக்கிறார் எனவே மேலும் என்னைப் பற்றி ஒரு முறை கூட நீ நினைக்கவில்லையா என கேட்க அதற்கு கண்ணம்மா இந்த மனசு எத நினைக்க கூடாது நினைக்குதோ அதே தான் நினைச்சுகிட்டு இருக்கு எனக் கூறுகிறார்.
உடனே பாரதி இந்த சவாலில் நீ தோத்துட்ட என்ன கூற பிறகு மீண்டும் கண்ணம்மா பாரதியை இந்த ஊரில் இருந்து கிளம்ப சொல்கிறார் அதற்கு பாரதி நான் இந்த ஊரில் இருந்து கிளம்பினால் அது உன்னையும் நம்மளுடைய மகள்களையும் அழைத்துக் கொண்டும் தான் செல்வேன் எனக்கூறி மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். இவ்வாறு விரைவில் கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்வார் பிறகு இந்த சீரியலும் முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.