குணமான பாரதி அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள்..

bharathi kannamma
bharathi kannamma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் சமீப காலங்களுக்காக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியே பல மாதங்களாக ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக பாரதிக்கு தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் மறந்த நிலையில் எப்படியாவது அவரை குணப்படுத்த வேண்டும் என கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர் அந்த வகையில் கண்ணம்மா பாரதியை காதலித்த நினைவுகளை கொண்டு வருகிறார் மேலும் இதன் மூலம் பாரதிக்கு பல நினைவுகள் வந்து விடுகிறது.

இதனை அடுத்து பாரதிக்கு ஃப்ரீயாக மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது வெளிநாட்டிற்கு பாரதி கிளம்பயிருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் கண்ணம்மாவை பாரதி சந்திக்க வந்த நிலையில் கண்ணம்மா கோபப்படுகிறார் இன்னும் மாறவில்லை எனவும் உங்களை குணப்படுத்துவதற்காக தான் நடித்ததாக கூறுகிறார்.

பாரதியும் உன்னை தொந்தரவு செய்வதற்காக இங்கு வரவில்லை என்னுடைய நினைவுகளை கொண்டு வந்து சரி செய்ய காரணத்தினால் நன்றி சொல்ல வந்தேன் எனக் கூறிவிட்டு ஊரை விட்டு கிளம்புவதையும் சொல்கிறார். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்க லட்சுமி, ஹேமா இருவரும் பாரதியை கட்டி அணைத்து அழுகின்றனர்.

இவ்வாறு இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியிருக்கும் நிலையில் பாரதி ஏர்போர்ட் செல்லும் நேரத்தில் ஏர்போர்ட்டிற்க்கு நேராக சென்று கண்ணம்மா பாரதியிடம் மன்னிப்பு கேட்டு அவரை ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இவர்கள் இணைந்தவுடன் இந்த சீரியல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.