விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து சில காலங்களாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் பலமுறை கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இயக்குனர் மேல் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள் மேலும் கடுமையாக விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாரதிக்கு தலையில் அடிபட்ட நிலையில் பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விட்டார் எனவே கண்ணம்மா மூலமாக நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும் என அனைவரும் முயற்சி செய்து வருகிறார்கள் எனவே கண்ணம்மா திருமணத்திற்கு முன்பு பாரதியுடன் காதலித்த பழைய நினைவுகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தாவணி பாவாடையை அணிந்து கொண்டு பழைய கண்ணா மாவாக மாறி உள்ளார்.
இதனை அடுத்த இவ்வாறு இந்த சீரியல் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் டைட்டில் பாடல் தான். எனவே முதன்முதலாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தித்த இடத்தில் நின்று கண்ணம்மா அந்த பாடலை பாடிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அதனை கேட்க்கும் பாரதி கண்ணம்மாவின் பின் தொடர்ந்து வருகிறார் கடைசியில் இருவரும் சந்தித்துக் கொண்டிருக்க இருவரும் அந்த சமயத்தில் தங்களுடைய காதலை வெளிப்படுத்துகின்றனர்.
இவ்வளவு நாள் பாரதி மீது கோபத்தில் இருந்த கண்ணம்மா பாரதியின் நினைவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்க்காக குடும்பத்தின் துணையுடன் இவ்வாறு செய்து வருகிறார். உடனே பாரதிக்கும் பழைய நினைவுகள் வர கண்ணம்மாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி பேசிக் கொண்டிருக்க உடனே மயக்கம் போட்டு விடுகிறார். பிறகு கண்ணம்மா வீட்டிற்கு சென்று அழ மறுபடியும் பாரதியை சந்திக்கிறார்.
அப்பொழுது கண்ணம்மா சேர்ந்து வாழலாம் என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் பாரதியும் மயங்கி விழுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதற்கு மேல் பாரதியின் இரண்டு மகள்கள் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் வளர்ந்து எப்படி வாழப் போகிறார்கள் என்பதனை மையமாக வைத்து பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது.