எனக்கும் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறது உண்மைதான்.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல்..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகைகள் இன்றைய எபிசோடில் பாண்டிவுடன் தொடர்பில் இருப்பதாக ஒரு முழுவதும் கண்ணம்மாவை பற்றி தவறாக பேசி வருகிறார்கள். அதாவது மசாலா போட வந்த கடையிலும் பொருட்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர் எனவே என்ன நடந்தது என்பதனை தெரிந்து கொள்ளாத கண்ணம்மா குழப்பத்தில் இருந்து வருகிறார்.

பிறகு வீட்டிற்கு சென்றவுடன் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் தாமரை கண்ணமாவிற்கு புரிய வைக்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மாவின் அப்பா சண்டை போட்டுவிட்டு சேரும் சகதியமாக வீட்டிற்கு வர கண்ணம்மா என்ன ஆனது என கேட்கிறார். அவர் கோபத்துடன் ஊர் ஜனங்கள் நாக்குல நரம்பு இல்லாமல் என்னென்னமோ பேசுறாங்க அப்பா எது சொன்னாலும் உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்லுவேன் உனக்கு தெரியும் இப்ப சொல்றதையும் கேளுமா என்ன சொல்கிறார்.

கண்ணம்மா சொல்லுங்கப்பா என கேட்க நீ உன் புருஷனோட சேர்ந்து வாழு என  கூற கண்ணம் அதிர்ச்சி அடைகிறார் நம்ம இந்த ஊரை விட்டு போயிடலாம் என சொல்ல என்னாச்சு என புரியாமல் கேட்கிறாள். கண்ணம்மா பாண்டியனின் வப்பாட்டி என ஊரில் பேசும் பேச்சையும் இதனால் சண்டை போட்டு சட்டை கிழிந்து வந்த விஷயத்தைப் பற்றி அப்பா சொல்ல கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே கண்ணம்மா இன்னைக்கு இந்த பாண்டிக்கு இருக்கு என சொல்லி அங்கிருந்து கோபமாக கிளம்புகிறாள். தாமரை ஓடி சென்று பாரதியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூற பாரதியும் கோபத்துடன் அங்கிருந்து வேகமாக செல்கிறார். இதனிடையில் பாண்டியின் நண்பர்கள் கண்ணம்மாவை வழிமறித்து பிளான் பண்ணிய அவளை அசிங்கப்படுத்திய விஷயங்களை புட்டு புட்டு வைக்க பாரதியும் அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்கிறார்.

உடனே கண்ணம்மா இன்னைக்கு உங்க அண்ணன் எப்படி அசிங்கப்பட்ட போறான் பாருங்க என சவால் விட்டு குஸ்தி நடக்கும் இடத்திற்கு செல்கிறார் ஒருபுறம் பாண்டி ஜெயித்து விட்டு இந்த ஊர்ல என்னை ஜெயிக்க யாரும் இல்லையா என வீர வசனம் பேசிக் கொண்டிருக்க அப்பொழுது அங்கு வரும் கண்ணம்மா கைத்தட்டி கொண்டு வருகிறாள் அவள் வந்ததும் ஊரார்கள் அனைவரும் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.

கண்ணம்மா பாண்டி என்ன வச்சிக்கிட்டு இருக்கிறது உண்மைதான் ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் பாண்டி என்னமோ என் மேல ஆசைப்பட்டதன் வந்தாரு ஆனா அவர் உண்மையான ஆம்பளை கிடையாது ஆம்பளைங்கனா வெறும் நாலு பேர தூக்கிப்போட்டு அடிக்கிறது கிடையாது அது வேற விஷயம் அது பாண்டிக்கு கிடையாது என சொல்ல பாண்டி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். பாரதி பாண்டி வசமாக கண்ணம்மாவிடம் மாட்டிக் கொண்டதை பார்த்து சிரிக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.