பாரதியுடன் ஊர் சுற்றி விட்டு வந்த லட்சுமியை வீட்டை விட்டு வெளியே போ எனக் கூறிய ஹேமா.! அமைதியாக இருக்கும் கண்ணம்மா..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் விரைவில் முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வரும் நிலையில் சில மாதங்களாக கிளைமாக்ஸ் காட்சிகளை வைத்து உருட்டி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட நிலையில் கண்ணம்மா வேண்டாம் என முடிவெடுத்து தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு தன்னுடைய அப்பாவின் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். மேலும் அங்கு தனக்கு சமைக்கும் வேலைகள் தெரிவதை வைத்து ஓட்டி வரும் நிலையில் செல்ல பாண்டியிடம் சில பிரச்சினைகளிலும் மாட்டிக் கொண்டார்.

மேலும் செல்லப்பாண்டியும் கண்ணம்மாவை பழி வாங்க வேண்டும் என்பதற்காக கண்ணம்மாவுடன் தப்பு நடந்தது போல் நாடகம் ஒன்றை நடத்த அனைவரும் கண்ணம்மா மிகவும் தப்பானவள் என கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இதனை தெரிந்து கொண்ட கண்ணம்மா நேரில் சென்று செல்ல பாண்டியை அறைந்து இதற்கு மேல் இதுபோன்று என்னிடம் வைத்துக் கொள்ளாதே என எச்சரித்து விட்டு வருகிறார்.

இதனை அடுத்து பாரதி கண்ணம்மா இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ள நிலையில் வாரம் இரண்டு நாட்கள் குழந்தைகள் பாரதியுடன் இருக்க வேண்டும் என கோர்ட் உத்தரவு போட்டு உள்ளது எனவே இந்த வாரம் லக்ஷ்மி பாரதியுடன் இரண்டு நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு வருகிறாள் வந்தவுடன் ஹேமா நீ எதற்கு இங்கு வந்த நீ அம்மாவுக்கு துரோகம் செஞ்சிட்ட இனிமே இந்த வீட்டிற்கு நீ வரக்கூடாது வெளியில் போய் என சண்டை போட கண்ணம்மா அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.

பிறகு கண்ணம்மாவிடம் லட்சுமி என்னம்மா நீ இப்படி அமைதியா இருக்க எனக்கு அப்பா கூட இருக்கணும்னு தோணுச்சு அப்பா கூட நீ அம்மா கூட இருந்தா தான் சரியா இருப்ப என சொன்னாரு எனக்கு நீயும் முக்கியம் அப்பாவும் முக்கியம் எனக் கூறி அழுகிறார் இவ்வாறு இதனால் தன்னுடைய மகளுக்காக விரைவில் கண்ணம்மா பாரதி ஏற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.