முடியப்போகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நியூ என்ட்ரி தரும் பிரபல நடிகர்.!

bharathi-kannama
bharathi-kannama

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் தொடர்ந்து விஜய் டிவியின் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்த வரம் காரணமாக அந்த சீரியலினை நீட்டிக்கொண்டே போகிறார்கள்.

அதாவது விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் எப்பொழுது இந்த சீரியலை முடிப்பீர்கள் என எதிர்பார்த்து வந்தார்கள்.

அந்த வகையில் இவர்கள் எதிர்பார்த்தது போலவே கிளைமாக்ஸ் காட்சிகளும் பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அப்பொழுது முடியும் என தெரியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மாவை தேடி கிராமம் வருகிறார். அங்கு பாரதி தலையில் அடிபட்டு தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுகிறார்.

எனவே கண்ணம்மா எப்படியாவது பாரதியை சரி செய்ய வேண்டும் என முயற்சித்து தற்போது தான் குணமடைய வைத்துள்ளார். இதனை அடுத்து கண்ணம்மா பாரதி செய்த தவறுகளை மறந்து விட்டு ஏற்றுக்கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து விட இந்த சீரியல் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது திருமண வைபோக நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது அதாவது இரண்டாவது முறையாக பாரதி கண்ணம்மா இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் திருமண வைபோக நிகழ்ச்சிகள் நடிகர் ஆர்.ஜே பாலாஜி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவருடைய நடிப்பில் ரன் பீ ரன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படம் வருகின்ற 3ம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக தான் அவர் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இவரை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை போட்டியாளரான சிவினும் இந்த சீரியலில் என்ரிக் கொடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.