விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் மூலம் கண்ணம்மாவின் மீது எந்த தவறும் இல்லை என்பதை தெரிந்து கொண்டார் இந்நிலையில் லக்ஷ்மியும் ஹேமாவும் தனக்கு பிறந்த குழந்தைகள்தான் என்ற உண்மையை தெரிந்து கொண்ட மிகவும் வருத்தப்படுகிறார்.
இந்நிலையில் ஹேமா மாடியிலிருந்து கீழே விழுவதாக மிரட்டிய நிலையில் உடனே பாரதி நான் தான் உன் அப்பா எனக் கூறுகிறார். பிறகு ஹேமா உயிரை காப்பாற்ற தான் உன்னை பெற்ற அப்பா எனவும் கண்ணம்மா தான் தாலி கட்டிய மனைவி என சொல்கிறார் என கண்ணம்மா இவ்வாறு கூற பிறகு பாரதியின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் எனை கேட்கிறார்.
அப்பொழுது பாரதி தான் நான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்ததாக சொல்ல அந்த நேரத்தில் வந்த வெண்பா உனக்கு குழந்தையை பிறக்காது நீ பத்து வருஷத்துக்கு முன்னாடி டெஸ்ட் எடுத்தியா அது எப்படி பொய்யாகும் என கேட்க அப்பொழுது துர்கா வந்து வெண்பா தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என உண்மையைப் போட்டு உடைக்கிறார்.
இதனால் கோபத்தில் பாரதி வெண்பா மீது கோபப்பட வெண்பா சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதனால் பாரதி கண்ணம்மா மீது இத்தனை ஆண்டுகளாக பழி போட்டதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்பொழுது கண்ணம்மா காலில் விழுந்து இனிமேல் என் குழந்தைகள் லட்சுமி, ஹேமாவுடன் நாம சேர்ந்து வாழ்வோம் நீ என்னை மன்னித்து ஏற்றுக் கொள் என கெஞ்சுகிறார்.
அப்பொழுது சௌந்தர்யாவும் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள சொல்கிறார் இந்நிலையில் கண்ணம்மா எடுக்கப் போக முடிவு என்பதை இதற்கு மேல் தான் தெரியவரும் இதோடு இந்த சீரியல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரசிகர்கள் நீண்ட காலங்களாக இந்த சீரியல் எப்பொழுது முடியும் என காத்து வந்த நிலையில் தற்பொழுது ஒரு வழியாக முடிந்து விட்டது.