விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. சில வருடங்களாக ஜவ்வு போல் இழுத்து வந்த இந்த சீரியல் விரைவில் முடிய இருக்கிறது என ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் இந்த கிளைமாக்ஸ் காட்சிகளில் அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது.
அந்த வகையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பாரதி டெல்லிக்கு சென்று தற்பொழுது லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தன்னுடைய மகள்கள் தான் கண்ணம்மாவின் மீது எந்த ஒரு தவறும் இல்லை அவள் மிகவும் சரியானவர் என்ன பாரதிக்கு தெரிய வர பிறகு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். மேலும் கண்ணம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அவசர அவசரமாக சென்னை வர அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்துள்ளது.
அதாவது ஹேமாவுக்கு சமீப காலங்களாக கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரியவந்துள்ளது பிறகு தன்னுடைய அப்பா யார் என கேட்டு தொந்தரவு செய்து வந்தார் பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பாவை தானாக தேடிக் கொள்கிறேன் என வீட்டை விட்டு கிளம்பிய இவர் வெண்பாவின் சூழ்ச்சியினால் கடக்கப்படுகிறார் பிறகு ஹேமா தனக்கு கிடைத்த போனின் மூலம் கண்ணம்மாவிற்கு லொகேஷன் அனுப்ப பிறகு ஹேமாவை காப்பாற்றி விடுகிறார்.
இதனால் மகிழ்ச்சி அடைய உடனே ஹேமாவிற்கு தலையில் அடிபட்டு இருப்பது தெரிய வருகிறது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் ஹாஸ்பிடல் மாடியில் இருந்து என் அப்பா யார் என்று தெரியவில்லை யார் என்று சொல்லுங்கள் அப்படி சொல்லவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என ஹேமா மிரட்டுகிறார்.
இதனால் பதறிப் போன பாரதி அனைத்து உண்மைகளையும் கூறி ஹேமாவை காப்பாற்றுகிறார் கண்ணம்மாவிடம் தன் தவறு மன்னிப்பு கேட்கிறார் ஆனால் கண்ணம்மா வேறு ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது இனி நாம் சேர்ந்து வாழ்ந்தாலும் பேருக்கு தான் இருப்போம் நீங்கள் என்னை சந்தேகப்பட்ட பொழுதே நம் உறவு இறந்துவிட்டது ஒரு அப்பாவாக குழந்தைகளிடம் பழக உங்களுக்கு உரிமை உள்ளது ஆனால் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறிய அனைவரையும் அதிர்ச்சடைய வைக்கிறார் இதனால் சௌந்தர்யா குடும்பமும் அதிர்ச்சடைகிறார்கள்.