விவாகரத்திற்கு ஓகே சொன்ன பாரதி.! பல்பு வாங்கிய கண்ணம்மா.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்

bharathikannama 1
bharathikannama 1

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்த நிலையில் சில மாதங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது எனவே விரைவில் முடியும் என ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மாவின் மீது எந்த தவறும் இல்லை என லட்சுமியும் ஹேமாவும் தன்னுடைய மகள்தான் என்பதை தெரிந்து கொண்ட நிலையில் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கும் கண்ணம்மா தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு வந்து விடுகிறார் கண்ணம்மா மற்றும் தன்னுடைய மகள்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக பாரதியும் அந்த கிராமத்தில் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இருந்தாலும் கண்ணம்மா பிடிவாதமாக உங்களுடன் இதற்கு மேல் சேர்ந்து வாழ முடியாது என கூறுகிறார் இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் இவர்களுக்கு விவாகரத்து ஏற்கனவே கேட்டிருந்த நிலையில் அதற்கான கடைசி இயரிங் நடைபெறுகிறது அதில் கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்து வாழ முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார்.

எனவே பாரதியிடம் கேட்கும் பொழுது அனைவரும் பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ ஆசை என கூறுவார் என்று எதிர்பார்த்தார்கள் மேலும் கண்ணம்மாவும் எப்படியா இருந்தாலும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்லப் போறீங்க இந்த கேச இன்னும் இழக்க தான் போறீங்க என நினைத்து வந்த நிலையில் திடீரென பாரதி எனக்கு கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறி விடுகிறார்.

உடனே அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு கோர்ட் இவர்களுக்கு டிவோர்ஸ் கொடுத்து விடுகிறது. இவ்வாறு நினைத்து வந்த கண்ணம்மாவிற்கு பாரதி பல்பு கொடுத்து விட்டார். ஆனால் பாரதி இப்படி டிவோர்ஸ் செய்து விட்டால் வாரத்தில் இரண்டு நாட்கள் தன்னுடைய மகள்களுடன் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்காது.