விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் கடந்த சில நாட்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் எப்பொழுது இந்த சீரியல் முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கண்ணம்மாவின் மனதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காக பாரதியும் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஊரில் இருப்பவர்கள் பாரதியை திட்டி அனுப்பியும் பாரதி கண்ணம்மாவை அழைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்து வருகிறார். இவ்வாறு தற்பொழுது இந்த ஊரில் மருத்துவமனை வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்.
லட்சுமி பாரதியை தன்னுடைய அப்பாவாக ஏற்றுக் கொண்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் வாசப்படியில் அமர்ந்து கொண்டு படிப்பது போல் பாரதியை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துகிறார் அதனை பார்த்து விட்டு ஹேமா என்ன டாக்டர் கிட்ட பேசுற மாதிரி இருக்கு எனக் கூற நான் ஏன் அவர்கிட்ட பேசணும் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என கோபமாக உள்ளே செல்கிறார்.
பிறகு இரவில் பாரதி கண்ணம்மாவிற்காக பாரதி காதலி கண்ணம்மா என்ற பாடலை பாட கண்ணம்மா எழுந்து அந்த பாடலை கேட்கிறார். மேலும் காலையில் எழுந்தவுடன் கண்ணம்மா வாசலைக் கூட்ட பாரதி பாடல் பாட உங்களுக்கு என்ன கொழுப்பா என கேட்டு சண்டை போடுகிறார். இந்த நேரத்தில் பாரதி மயக்கம் போட்டு விழ கண்ணம்மாவின் மாமா தண்ணீர் கொடுத்து எழுப்புகிறார் கண்ணம்மா ரொம்ப நடிக்காதீங்க என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் தாமரைச்செல்வி நடித்துவரும் நிலையில் அவருடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது எனவே கண்ணம்மா பாரதியை அழைத்து செல்கிறார் பிறகு பாரதி அந்த குழந்தையை காப்பாற்றி விட பிறகு டெஸ்ட் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் இதனால் ஊரில் இருப்பவர்கள் ஏதோ எங்க ஊரு பிள்ளையின் உயிரை நீ காப்பாத்திட்ட அதனால உன்னை இப்ப சும்மா விடுறோம் என கூறிவிட்டு சொல்கிறார்கள்.