மீண்டும் நடித்து ஏமாற்றுகிறாரா வெண்பா.! யாரும் எடுக்காத விபரீத முடிவை எடுத்த பாரதி..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் தற்பொழுது பாரதி தனக்கு லெட்டர் எழுதிக் கொடுத்தது, லொகேஷன் அனுப்பியது இது எல்லாம் யார் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிறகு லட்சுமியை ஸ்கூலில் சந்திக்கிறார்.

மேலும் பாரதி ஹேமாவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக நினைத்து வந்த நிலையில் ஹேமா அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க எனவும் கூறியது பெரிதும் அதிர்ச்சினை ஏற்படுத்தியது. அதன் பிறகு பாரதி குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் டாக்டர் அப்பா என லட்சுமி குரல் கேட்கிறது உங்களுக்கு லொகேஷன் அனுப்பியது ஐ லவ் யூ அப்பா என பேப்பரில் எழுதி தூக்கி போட்டது சாப்பாடு வச்சது எல்லாம் நான்தான் ஆனா உங்களுக்கு என் ஞாபகம் வரவே இல்லையா லட்சுமி கேட்கிறார்.

உங்களுக்கு என் மேல் பாசமே இல்லையா என கேட்கிறார் ஹேமா உங்க கூடவே இருந்ததினால் அவங்களை மிஸ் பண்ணல அவளுக்கு அவ தேடுன அம்மா கிடைச்சிட்டாங்க ஆனா எனக்கு நான் தேடுன அப்பா கிடைக்கவில்லை நான் தான் அம்மாகிட்ட இந்த ஊரை விட்டு போயிடலாம்னு சொன்னேன் ஆனா சென்னையில் இருந்து கிளம்பி வந்ததும் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன் என சொல்லி அழுகிறார்.

உடனே பாரதி நான் செஞ்சது தப்புதான் என மன்னிப்பு கேட்கிறார் மேலும் அப்பா என கூப்பிடலாமா என பர்மிஷன் கேட்க உன் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தையை கேட்க தான் நான் வெயிட் பண்றேன் என சொல்ல லட்சுமி அப்பா என கூப்பிட்டு லவ் யூ என்ன சொல்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வெண்பாவை கோர்ட்டில் நிறுத்தி எப்ப பார்த்தாலும் கண்ணம்மா கண்ணம்மா என சொல்லி எல்லோரையும் அடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

அப்பொழுது நீதிபதியாக இருப்பவரும் வெண்பா கண்ணுக்கு கண்ணம்மா போலவே தெரிய அவரை அடிக்க முயற்சிக்கிறார் இதுதான் இவருடைய நிலைமை என மன அழுத்தத்தில் இருப்பதாக கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வெண்பா தரப்பு நீதிபதி வாதாட அரசு தரப்பு மருத்துவர் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சப்மிட் செய்ய சொல்லில் உத்தரவிடுகின்றார்.

இந்நிலையில் ஊர் பொதுமக்கள் மனசை ஏமாற்ற என்ன வழி என யோசிக்கிறார் அப்பொழுது ஊர் மக்கள் மனசை மாற்ற வேண்டும் என்றால் பல வருஷங்களாக எதிர்பார்த்து அவர்கள் காத்துக் கொண்டிருக்கும் மருத்துவமனையை அரசாங்கத்தின் மூலம் கட்டவைக்க வேண்டும் எனவே அதற்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்து உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அப்பொழுது ஊர் மக்கள் ஊரை விட்டு அவனே கிளம்பிடுவான் என கலாய்த்து செல்கின்றனர் ஆனால் லட்சுமியும், ஹேமாவும் பாரதியை நினைத்து வருத்தப்படுகின்றனர்.