தன்னுடைய அப்பாவை சேர்வதற்காக லட்சுமி போட்ட பிளான்.! அதிரடியான முடிவு எடுத்த பாரதி..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் சமீப காலங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் முடியும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் பத்து வருடங்கள் கழித்து பாரதிக்கு கண்ணம்மாவின் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதனை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தெரிந்து கொண்ட பாரதி லட்சுமி, ஹேமா இருவரும் தன்னுடைய மகள்கள் தான் என்பதை தெரிந்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் பாரதி ஏற்றுக்கொண்டும் கண்ணம்மா உங்களுடன் வாழ முடியாது எனக் கூறிவிட்டு தன்னுடைய மகள்களை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு வருகிறார். இந்த நேரத்தில் லட்சுமி யாருக்கும் தெரியாமல் ஃபோனில் இருந்து பாரதிக்கு லொகேஷன் அனுப்பி விடுகிறார்.

மேலும் தொடர்ந்து பாரதியிடம் பேசி வந்த நிலையில் பாரதி ஹேமா என நினைத்து வந்த நிலையில் தற்பொழுது லட்சுமி என தெரியவந்துள்ளது அதாவது பாரதி பள்ளிக்கூடத்திற்கு சென்று லட்சுமியை சந்திக்கிறார் அப்பொழுது லட்சுமி நான் தான் உங்களுக்கு லோகேஷன் அனுப்பினேன் மற்ற போனில் பேசியது நான் தான் எனது உண்மையை கூறுகிறார். மேலும் இதுவரையிலும் நான் உங்களுடன் இருந்ததுதில்லை எனவே இதற்கு மேல் உங்களுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என தோன்றுகிறது.

உங்களை அப்பா என்று கூட கூப்பிட்டது இல்லை எனக் கூறி கண் கலங்க பாரதி அப்பா என கூப்பிடு லட்சுமி என கூறுகிறார் லக்ஷ்மியும் அப்பா எனக் கூற பாரதி லட்சுமியை கட்டியணைத்து அழுகிறார். மேலும் என்னை மன்னித்துவிடு எனவும் கூறுகிறார் இப்படிப்பட்ட நிலையில் பாரதி இந்த ஊருக்கு மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார்.

எனவே அனைவரும் ஏதாவது வேலை இருந்தா போயி பாருப்பா என கூறுகிறார்கள் அப்பொழுது கண்ணம்மா கிணற்றில் தண்ணீர் இழுக்கிறார். எனவே அங்கு சென்று பாரதி கண்ணம்மா நான் உன்னை எவ்வளவோ காயப்படுத்தி இருக்கிறேன் எனவே நான் இந்த உண்ணாவிரதத்தில் செத்தால் கூட இதிலிருந்து பின் வாங்க மாட்டேன் என கூறிவிட்டு செல்ல கண்ணம்மா மிகவும் எமோஷனலாக பார்க்கிறார்.