மீண்டும் விஷத்தை கக்க ஆரம்பித்த வெண்பா.! இனிமேல் பாரதிக்கும் ஆப்பு தான்..

BHARATHIKANNAMA
BHARATHIKANNAMA

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை எப்படியாவது வீட்டில் அழைத்து வரவேண்டும் என்பதற்காக பாரதி அவள் வீட்டிற்கு கிளம்புகின்றனர். பிறகு கதவை தட்டும் பொழுது வீடு பூட்டி இருப்பதை கவனித்த நிலையில் கண்ணம்மா எங்கு போய் இருப்பாள் என யோசித்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அகிலன் அங்கு இருக்கும் லெட்டர் ஒன்றை பார்க்கிறான்.

அதனை பிரித்து படிக்கும் பொழுது எங்களை யாரும் தேட வேண்டாம் தொந்தரவு செய்ய வேண்டாம் இனிமே நான் என் குழந்தையோடு சந்தோஷமாக வாழ போகிறேன் இப்படிக்கு கண்ணம்மா என எழுதி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பாரதி என்னை விட்டுவிட்டு எங்கே போன கண்ணம்மா என கதறி அழுகிறான் பிறகு சௌந்தர்யாவும் அவசரப்பட்டுட்டியே கண்ணம்மா என சொல்ல பாரதிக்கு ஹாஸ்பிடல் இருந்து போன் வருகிறது.

அது மட்டுமல்லாமல் ஹாஸ்பிடல் போன் செய்து விட்டு விலக்குவதாக கூறி விக்ரம் சாருக்கும் ஒரு லெட்டரை எழுதி இருக்கிறார். பிறகு மற்றொருபுறம் ஜெயிலில் இருக்கும் போது வெண்பா சுவற்றில் கண்ணம்மா போட்டோவை வரைந்து வைத்து புலம்பி கொண்டிருக்கிறாள் ஜெயிச்சுட்டேன் மட்டும் நினைக்காத இனிமேதான் சம்பவமே இருக்கு உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் என சபதம் எடுக்கிறார்.

பிறகு அப்பொழுது ஜெய்லர் வந்து இப்படி எல்லாம் இங்க கத்தக்கூடாது டாக்டர் என்று சொல்லி மரியாதை நடத்திக்கிட்டு இருக்கோம் என எச்சரிக்கிறார். பிறகு கண்ணம்மா தன்னுடைய அப்பாவின் சொந்த ஊருக்கு லட்சுமி ஹேமாவுடன் கிளம்புகிறார் மேலும் அந்த ஊரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க முடிவு செய்து இருக்கிறார்.

மேலும் பாரதி மற்றும் அனைவரும் வருத்தப்பட அஞ்சலி அக்கா இருந்த வேலையும் விட்டுட்டா இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன பண்ணப் போறா என பேசிக் கொண்டிருக்கும் பொழுது வேகமாக மாடிக்கு போகும் பாரதி பேக்கில் துணிகளை எடுத்துக்கொண்டு நான் கிளம்புகிறேன் என சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர் நான் எப்படியாவது கண்ணம்மாவை கண்டுபிடித்து விட்டு தான் வருவேன் என கூறுகிறார்.