விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் கிளைமாக்ஸ் காட்சி நோக்கி ஒளிபரப்பாகி வந்த நிலையில் மேலும் சப்பு போல் இந்த சீரியல் நீண்டு கொண்டே போகிறது இதனால் ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.
அதாவது பாரதி டெல்லி சென்று ஹேமா, லக்ஷ்மி இருவரும் தனக்கு பிறந்த மகள்கள் தான் என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் தெரிந்து கொண்ட நிலையில் பிறகு கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டும் அதனை கண்ணமா ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் ஹேமா, லக்ஷ்மி இருவரும் கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாரதி கண்ணம்மாவின் காலில் விழுந்து இதற்கு மேல் ஒன்றாக வாழலாம் என கூறிய நிலையில் அதற்கு கண்ணம்மா இதற்குப் மேல் உங்கள் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லை. மேலும் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம் எனவே இனிமேல் என்னுடைய இரு மகள்களும் நான் என்னுடைய உலகம் என கூறிவிட்டு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.
பிறகு சௌந்தர்யா பாரதி என அனைவரும் தங்களோட வீட்டிற்கு செல்ல அங்கு பாரதி கண்ணம்மா எடுத்த முடிவில் உறுதியாக இருப்பாள் அவர் எப்படி இந்த வீட்டிற்கு வருவாள் என கூறி வருத்தப்படுகிறார். மேலும் சௌந்தர்யாக, அகில் அனைவரும் கண்ணம்மாவை தேடி அவருடைய வீட்டிற்கு செல்கிறார்கள் அங்கு இருக்கும் கடிதத்தை படித்துவிட்டு அனைவரும் பதறிப் போய் விடுகிறார்கள்.
அதாவது அந்த லெட்டரில் யாரும் எங்களைத் தேட வேண்டாம் இனிமேலாவது எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என எழுதி வைத்துவிட்டு ஹேமா, லட்சுமியை அழைத்துக் கொண்டு வேறு ஒரு ஊருக்கு செல்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் பாரதி நான் கண்ணம்மாவை தேடி செல்ல போகிறேன் என முடிவெடுத்துள்ளார்.