காலை பிடித்து கெஞ்சியும் பாரதியை வேண்டாம் என கூறிய கண்ணம்மா.! மீண்டும் கதையை இழக்கும் விஜய் டிவி..

bharathi-kannama-1
bharathi-kannama-1

விஜய் டிவியில் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் சமீப காலங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான டுவிஸ்ட்கள் இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பாரதி லட்சுமி, ஹேமா தன்னுடைய மகள்கள் தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துக் கொண்டார் மேலும் அதனை டெல்லி சென்று தெரிந்து கொண்ட இவர் பிறகு சென்னை திரும்புகிறார்.

இந்த நேரத்தில் ஹேமாவை வெண்பா கடத்திய நிலையில் பிறகு கண்ணம்மா கண்டு பிடித்து விடுகிறார். ஹேமாவிற்கு தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளார் இதனை அறிந்து கொண்டு மருத்துவமனைக்கு வரும் பாரதி பிறகு கண்ணமாவிடம் நாம் இதற்கு மேல் ஒன்றாக வாழலாம் என கெஞ்சுகிறார் மேலும் வெண்பா செய்த அனைத்து சதி திட்டங்களும் தெரிய வருகிறது.

இதனால் பாரதி வெண்பாவின் மீது கடும் கவனத்தில் இருக்கிறான். எனவே பாரதி தன்னுடைய தவறை உணர்ந்த நிலையில் கண்ணமாக ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறான் ஆனால் கண்ணம்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில் இன்று வெளியாகும் எபிசோடில் மீண்டும் பாரதி கண்ணம்மாவிடம் கெஞ்ச கண்ணம்மா இந்த ஒரு பேப்பரை வைத்து எப்படி ஹேமா, லக்ஷ்மி தன்னுடைய மகள் என நம்புகிறீர்கள்?

வெண்பா செய்த சதி திட்டத்தை போல் அங்கு வேறு யாராவது மாத்தி வச்சிருப்பாங்க என கூறுகிறார் பிறகு வாழனும்னா நம்பிக்கை வேண்டும் ஹேமா, லக்ஷ்மி உங்களுடைய மகள்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என கூறுகிறார். எனவே இதனால் அனைவரும் பாரதியை ஏற்றுக் கொள் என கெஞ்சுகிறார்கள் ஆனால் கண்ணம்மா எனக்கு யாரும் தேவையில்லை என்னுடைய இரு மகள்கள்தான் என்னுடைய உலகம் என பாரதியை வேண்டாம் என கூறிவிட்டு கண்ணம்மா ஹேமா, லக்ஷ்மியும் இருவரையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார்.