கண்ணம்மாவை மேலும் மேலும் காயப்படுத்தும் லட்சுமி.. போன் செய்த பாரதியை கிழித்தெடுத்த சௌந்தர்யா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா..

bharathi-kannama
bharathi-kannama

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா ஹேமாவை நினைத்து தன்னுடைய கணவரிடம் கூறி வருத்தப்படுகிறார் மேலும் பாரதிக்கு போன் போட போன் சுவிட்ச் ஆஃப் என வருகிறது.

எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியல என்ன பாரதியின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் பத்து வருடத்திற்கு முன்னாடி பார்த்த சௌந்தர்யாவை பார்ப்பான் அவன் என வாயாலயே நீ என்னுடைய பொண்ணு என்ற சொல்ல வைக்கிறேன் என சௌந்தர்யா மிகவும் ஆக்ரோஷமாக பேசுகிறார்.

பிறகு கண்ணம்மாவிடம் லட்சுமி ஹேமாவிடம் உண்மையை ஏன் சொல்லக்கூடாது என நினைக்கிறேன் எதற்காக நீயும் அப்பாவும் பிரிஞ்சீங்க உங்களுக்குள்ள என்ன பிரச்சனை அப்படியே நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பிரிந்திருந்தாலும் அப்பா ஏன் எங்கள பொண்ணா ஏத்துக்க மாட்டேங்கிறாரு ஏன் பேச மாட்டேங்கறாரு என்ன தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் பதில் அளிக்க முடியாத கண்ணம்மா கண் கலங்குகிறார்.

பிறகு டிஎன்ஏ டெஸ்ட் கிடைத்ததும் பாரதி சௌந்தர்யாவுக்கு போன் போட சௌந்தர்யா கோபப்படுகிறார் பிறகு நடந்த அனைத்து விஷயங்களையும் கூற ஹேமா இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் தன்னுடைய அப்பா யாருன்னு கேக்குறா நாங்க என்ன பதில் சொல்றது என சொல்ல பதரும் பாரதி இன்னும் நான்கு மணி நேரத்தில் அங்கு இருப்பேன் நீங்க இருக்கும் ஹாஸ்பிடல் எங்கே என கேட்கிறார்.

பிறகு நீ எதுக்காக டெல்லி போன எதுக்காக போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்தா என சௌந்தர்யா கேட்க எதுவும் என்கிட்ட கேட்காதீங்க என் சூழ்நிலை எப்படி நான் எல்லோருக்கும் நேரில் வந்து பதில் சொல்றேன் மேலும் என் வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்துடும் என சொல்லி போனை வைக்கிறார் அதன் பிறகு டெல்லியில் இருந்து பாரதி வேகமாக கிளம்பி சென்னை வருகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.