விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் முன்னணி வகித்த வேண்டும் என்பதற்காக புதிய சீரியல்கள் மற்றும் ஏராளமான புது முக நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த வகையில் உண்மையாக இருக்கும் ஒரு மனைவியை கணவன் சந்தேகப்பட்டால் அவருக்கு அடிமையாக வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை நமது மேல் தப்பு இல்லை என்றால் தனியாக வாழ்ந்து தப்பானவள் இல்லை என்பதை உணர்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா.
இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு வெண்பா செய்த சதி திட்டத்தால் இருவரும் பிரிந்தனர்.
இவ்வாறு தற்பொழுது பத்து வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் கண்ணம்மா மற்றும் பாரதி எப்படியாவது ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்பது அவருடைய குடும்பத்தினர் காத்து வருகிறார்கள். கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கும் தனது அப்பா டாக்டர் தான் என்பது தெரியவந்துள்ளது.
தற்பொழுதெல்லாம் டாக்டர் அப்பா என அழைத்த வரும் நிலையில் விரைவில் தனது அம்மா தப்பான பெண் கிடையாது என்பதை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் அந்த சீரியலில் இருந்து விலகவுள்ளார்.
எனவே பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் தற்பொழுது பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது இதனைப் பற்றிய ப்ரோமோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.