கண்ணம்மாவின் மீது அக்கறையாக இருக்கும் பாரதி.! இனி வருபவை..

bharathi kannama 02
bharathi kannama 02

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த சீரியல் டிஆர்பி யில் ஃடாப் சீரியலாக இடம்பெற்று வந்தன. பாரதிகண்ணம்மா சீரியலுக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி வந்தது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் மற்ற சீரியலுக்கு ஃடப் கொடுத்து வருகிறது. கண்ணம்மாவை மாற்றிய நிலையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் புதிய கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டதால் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பாரதியால் மட்டுமே குழந்தை உயிரோடு இருக்கிறது அதாவது மூளைச்சாவு அடைந்த குழந்தைக்கு இதயத்தை விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வர பல பிலான்கள் செய்து பின்னர் எதிர்பாராத விதமாக மழை பெய்ததால் ஹெலிகாப்டரின் உதவினால் குழந்தைக்கு இதயத்தை கொண்டு செல்ல சூழல் ஏற்பட்டது. இதனால் குழந்தையை காப்பாற்ற முடியுமா என்று எல்லோருக்கும் பதட்டம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒன்றறை மணி நேரத்திற்குள் மட்டும் தான் உயிரை காப்பாற்ற முடியும் இனி குழந்தையே காப்பாற்றவே முடியாது என்று எல்லோரும் நினைத்து விட்டனர். பெற்றோரும் இனி குழந்தையை காப்பாற்ற வழியே இல்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் கண்ணம்மா புத்திசாலித்தனமாக ஒரு பிளான் செய்து இதயத்தை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு வந்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்.

இந்நிலையில் கண்ணம்மாவினால் தான் குழந்தை உயிர் பிழைத்தது என்று கண்ணம்மாவை பாரதி பெருமையாக கூறி வருகிறார். தற்போது அந்த குழந்தை கண் விழித்தது அப்போது குழந்தைகள் முடித்ததுமே கண்ணம்மாவை தான் தேடுகிறது. கண்ணமாவையும் பாரதியையும் பார்த்து உங்களால் மட்டுமே நான் உயிர் வாழ்கிறேன். என்று அந்த குழந்தை இருவருக்கும் நன்றி கூறுகிறது. இதனால் கண்ணம்மாவின் மேல் பாரதிக்கு ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாரதியும் கண்ணம்மாவும் இனிமே அப்பா அம்மா எல்லாம் நாங்க தான் என்று கூறுகிறார்கள். அந்த குழந்தையும் அம்மா அப்பா என்று அழைக்கிறது அந்த புரோமோ மிகவும் பரபரப்பாகி வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து ரசிகர்கள் இனி பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரே ரொமான்ஸ் தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.