லக்ஷ்மி செய்த செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா.!

lakshmi 1
lakshmi 1

விஜய் டிவி ஒளிபரப்பாகி  வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா. அந்த சீரியலில் நடித்துவரும் அனைத்துக் குழப்பங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வந்த இந்த சீரியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இந்த சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவிற்கு காரணமாக இருந்தவரும் வெண்பா தனது அம்மாவின் பேச்சை கேட்ட அடங்கிய கிடைக்கிறாள்.

வெண்பாவின் அம்மா ஷர்மிளா தொடர்ந்து வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறார். இதைத்தொடர்ந்து சௌந்தர்யாவின் நண்பரொருவர் புதிய மருத்துவமனை தொடங்கி உள்ளார். அதில் பாரதி சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார் இவரைத் தொடர்ந்து கண்ணம்மாவும் அட்மினிஸ்டர் ஆபீசராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக ஒரு குழந்தைக்கு இதய பிரச்சனை இருந்து வந்தது எனவே இறந்து போன ஒரு குழந்தையின் இதயத்தை எடுத்து வந்து உயிருடன் இருக்கும் குழந்தைக்கு பொருத்த வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தைப் போலவே மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்தது.

அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் தற்பொழுது சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டு அந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது.  எனவே பத்திரிக்கையாளர்கள் பாரதியை பேட்டி எடுக்கும்போது இதற்கெல்லாம் முக்கிய காரணம் கண்ணம்மா தான் என்று கண்ணம்மாவை பெருமைப்படுத்தினார்.

பிறகு கண்ணம்மா மயக்கம் போட்டு விழ உடல் நிலையை சரியாக பார்க்க முடியாதா என்று மிகவும் பாசமாக பேசுகிறான். இப்படிப்பட்ட நிலையில் மறுநாள் கண்ணம்மா மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது டாக்டர் பாரதி என்று எழுதி இருக்கும் போர்ட் இருக்கிறதை பார்க்கிறார் அதனை எடுத்து படிக்கும்பொழுது லக்ஷ்மி ஐ லவ் யூ அப்பா என்று எழுதி இருக்கிறாள்.  உடனே கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு கால் செய்து அந்த போர்டை காண்பிக்கிறார் இதுதான் இன்று வெளியாக இருக்கிறது.