மருத்துவமனையில் மயங்கி விழுந்த கண்ணம்மா.! பாரதி செய்த செயலால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள்.!

bharathi kannama serial
bharathi kannama serial

விஜய் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா, இது தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வரும் நாடங்களில் ஒன்று, மிகவும் விறுவிறுப்பான கதை தொடருடன் ஒளிபரப்பப்படுகிறது.

இப்படி இருக்க பாரதி சக்திக்கு ஆபரேஷன் செய்து விட்டு வெளியே வருகிறார் வந்ததும் சக்தியின் பெற்றோர்கள் பாரதியை பார்க்க, ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று கூறுகிறார் பாரதி, அதற்கு சக்தியின் பெற்றோர்கள் பாரதியின் காலில் விழுகிறார்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று பாரதி அவர்களை எழுப்பிவிடுகிறார்.

அதன்பிறகு பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பாரதி இந்த ஒட்டுமொத்த மிஷின் ஒழுங்காக நடக்க எங்க ஹாஸ்பிடலோட அட்மின் ஆபீசர் கண்ணம்மாதான், அப்படின்னு சொல்ல எல்லோரும் கை தட்டுறாங்க. இப்படியெல்லாம் போயிட்டு இருக்க தற்போது வெளியான புரோமோவில், கண்ணம்மா செல்ஃபில் துணியை எடுக்கும் பொழுது அதிலிருந்து ஒரு ப்ளூ கலர் பலகை ஒன்று விழுகிறது.

அது என்னவென்று கண்ணம்மா எடுத்துப் பார்க்கிறார் அதில் டாக்டர் பாரதி எம்பிபிஎஸ் என்று அச்சடிக்கப்பட்டு உள்ளது அதற்கு மேல் ஐ லவ் யூ அப்பா என்று லக்ஷ்மி எழுதிய வாக்கியம் ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார் கண்ணம்மா.
மேலும் கண்ணம்மா, லட்சுமிக்கு அவர்தான் தன்னோட அப்பான்னு தெரிஞ்சிடுச்சா அப்படின்னு சொல்லி ரொம்பவே பதட்டபட்றாங்க அந்த பதட்டத்திலும் சௌந்தர்யாவுக்கு வீடியோ கால் பண்றாங்க அவங்ககிட்ட அந்த பலகையை காட்டுறாங்க.

இதில் என்ன போட்டு இருக்க பார்த்தீங்களா ஐ லவ் யூ அப்பான்னு எழுதி இருக்கு இது லட்சுமி தான் எழுதி இருக்கா அப்போ லட்சுமிக்கு பாரதிதான் தன்னோட அப்பான்னு தெரிஞ்சிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு அழுவுறாங்க,சௌந்தர்யாவும் அவங்களோட புருஷனும் ரொம்பவே அதிர்ச்சி அடைகிறார்கள் இதோட இந்த புரோமோவும் முடிவடைந்தது. மேலும் ரசிகர்களிடையே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.