விஜய் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும் நாடகம்தான் பாரதி கண்ணம்மா, இது தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வரும் நாடங்களில் ஒன்று,என்னதான் இந்த நாடகம் இரு வேளைகளும் ஒளிபரப்பபட்டாலும் இரவு வேளைகளில் மட்டுமே மக்களால் அதிகம் விரும்பி பார்க்க படுகிறது.
இந்த நாடகத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் மக்களை அவ்வப்போது ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும் மேலும் இந்த நாடகம் ஒரு சினிமா எடுப்பது போன்று எடுக்கப்பட்டு வருகிறது. ஹாஸ்பிடலில் அட்மின் ஆபீசர் ஆக பணியாற்றி வந்த கண்ணம்மா சக்திக்கு எளிதாக இதயம் கிடைப்பதற்கு புத்திசாலித்தனமாக யோசித்து ஒரு வழியைச் சொன்னார் அதன் மூலம் சக்திக்கு இதயம் சரியான நேரத்தில் பொருத்தப்பட்டது.
இதன் காரணமாக பாரதி கண்ணம்மாவின் சமயோகித புத்தியை நினைத்து பெருமிதம் அடைகிறார். மேலும் இது பாரதியிடம் கண்ணமா மேல் ஒரு நல் எண்ணத்தை ஏற்படுத்துகிறது, மேலும் கண்ணம்மா ஹாஸ்பிடலில் நல்ல பெயரை வாங்குகிறார் இதனை பிடிக்காத கணேஷ் கண்ணம்மாவை பழிவாங்க நினைக்கிறார்.
இது கனேஷனுக்கு அவ்வளவு எளிதில்லை என்பதால் கனேஷ், வெண்பாவும் கண்ணம்மாவை பழிவாங்க நினைக்கிறார் என்பதை அறிந்து அவருடன் இணைந்து கண்ணம்மாவை பழிவாங்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாக உள்ளார்,ஆனால் தற்பொழுது பாரதி கண்ணம்மா மீது ஒரு நல்ல எண்ணத்தை கொண்டுள்ளதால் இவர்களால் அதை அவ்வளவு எளிதாக செய்ய இயலாது என்பது ஒரு உண்மை.
மேலும் பாரதி கண்ணம்மாவின் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் இது பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.அவர்கள் என்னதான் நெருக்கமாக ஆனாலும் அவர்கள் எப்பொழுது சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அனைத்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.