வெண்பாவை வற்புறுத்தி துர்காவுக்கு திருமணம் செய்து வைத்த ஷர்மிளா.! இனிவரும் எபிசோட்.

bharathi-kannama-serial-3
bharathi-kannama-serial-3

விஜய் தொலைக்காட்சிகள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாரதி கண்ணம்மா இந்த நாடகம் மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஒரு நாடகமாக அமைந்துள்ளது மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்தும் முன்னணி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடகத்தில் வெண்பா பாரதியை திருமணம் செய்ய நினைக்கிறார் ஆனால் பாரதி எளிமையான கண்ணம்மாவை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் இதனால் வெறுப்படைந்த வெண்பா கண்ணம்மாவை பாரதியும் பிரிக்க வேண்டும் என்று நினைத்து, அவர்களைப் பிரித்து வைக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளாக சந்தேகத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்க நினைத்தாலும் ஏதோ விதி விளையாடுது என்று சொல்லுமளவிற்கு இருவரும் ஒரே ஆஸ்பிடலில் பணிபுரிந்து வருகின்றனர்.மேலும் தற்போது இவர்களுக்கிடையே சிறுசிறு அன்பால் ஏற்பட்ட மாற்றங்கள் தென்படுகிறது.

வெண்பாவிற்கு அப்பொழுது உதவிசெய்த ரௌடி தான் துர்கா, இவனை வெண்பா பல நாட்களாக கடத்தி வைத்திருந்தார் ஆனால் தற்போது வெண்பாவின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து வெண்பாவின் அம்மாவை வந்து பார்க்கிறான் துர்கா.வெண்பாவின் அம்மா ஷர்மிளாவிற்கு எப்பொழுதெல்லாம் சான்ஸ் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வெண்பாவை திட்டித் தீர்க்கிறார், வெண்பாவின் அம்மா வெண்பாவிற்கு கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் அதனால் துர்கா வந்து பார்த்த நிலையில் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அது தற்போது வெளியான பாரதி கண்ணம்மாவின் புரோமோவில் ஷர்மிளா வெண்பாவை வற்புறுத்தி துர்காவிற்கு திருமணம் செய்து வைப்பது போல் காட்சி வெளியாகியுள்ளது .இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இனி என்ன நடக்கும் என்று ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.