திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ஓவராக சீன் போடும் பாரதி கண்ணம்மா.!

bharathi kannama serial 2
bharathi kannama serial 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ஒரு காலத்தில் விருவிருப்பாக ஓடிக்கொண்டிருந்தது ஆனால் இப்போது விறுவிறுப்பு என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தின் கதையை காப்பி செய்து அப்படியே நடத்தி வருகிறார்கள். அந்தத் திரைப்படத்தில் ஆயிஷா என்ற குழந்தைக்காக இதயத்தை மாற்று வைப்பதற்காக போராடுவார்கள். இந்த சீரியல் கதையில் சக்தி என்ற குழந்தைக்கு இதயத்தில் மாற்று சிகிச்சை செய்வதற்கு மேற்கொள்கின்றார்கள்.

இதைத்தொடர்ந்து சக்திக்கு சரியான நேரத்தில் இதயத்தை பொருத்த வேண்டும் என்று போராடுகிறார்கள். அப்போது இதயத்தை கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸ் வலியிலே சிக்கிக் கொண்டுள்ளது. அந்த நேரத்தில் பாரதிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது கண்ணம்மா அந்த இடத்திற்கு சரியான நேரத்தில் இன்னொரு ஆம்புலன்சை எடுத்து வந்தார்.

எனவே, கண்ணம்மா ஆம்புலன்சை கொண்டு வந்ததால் இந்த சீரியலுக்கு கண்ணம்மா தான் ஹீரோயினாக பொருத்தமாக இருக்கும் அவரால் தான் சாத்தியமாகிறது என்பதை தத்ரூபமாக காட்டி வருகிறார்கள். இதனால் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இதற்கு ஆயிஷாவை சக்தி இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வரவைத்து சிகிச்சையை செய்திருக்கலாமோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியலை மக்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி இயக்குனர் கதையை மறந்து வேறு கதைக்கு செல்கிறார். என்று கேள்வி எழுப்புகிறார்கள். ரசிகர்கள் திரைப்படத்தின் கதைகளை காப்பி செய்து சீரியலில் புகுத்துவதால் பாரதிகண்ணம்மா சீரியல் உருட்டு என்று ரசிகர்கள் காலாய்ச்சி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் இருப்பதால் இவர்களுக்கிடையில் ரோமென்ஸ் வர வாய்ப்பு உள்ளதாக இருக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து டிஆர்பியில் பாரதிகண்ணம்மா சீரியல் சறுக்க வாய்ப்பிருக்கிறது. என்று நன்றாகவே தெரிகிறது இனி என்ன நடக்கப் போகும் என்பதை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.