விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.
தற்பொழுது தொடர்ந்து இந்த சீரியலில் பல விறுவிறுப்பான சுவாரசியமான காட்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது ஆயிஷா என்ற குழந்தை இறந்ததால் அவருடைய இதயத்தை சக்தி என்ற குழந்தைக்கு மாற்று அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.
எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆயிஷா என்ற குழந்தை விரும்பாண்டி என்ற ஊரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதன் பிறகு அந்த இதயத்தை சென்னைக்கு எடுத்து வர கிட்ட தட்ட ஒரு மணி நேரம் தேவைப்படுகின்றது.
அந்த பயணத்தில் பல போராட்டங்களை தொடர்ந்து சென்னைக்கு சென்று பாரதி சக்தி அறுவைக்கு சிகிச்சை செய்ய உள்ளார். இந்த சீரியலில் சென்டிமென்ட் காட்சிகள் என்றாலும் அதை பார்த்த ரசிகர்கள் மிகவும் கலாய்த்து வருகிறார்கள். ஏனென்றால் சரத்குமார், சேரன்,பிரசன்னா, ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல திரைப் பிரபலங்கள் நடித்து வெளிவந்த சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அப்படியே பாரதிகண்ணம்மா சீரியல் இரட்டை காப்பி அடிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் சில காட்சிகள் மாற்றம் மாற்றம் செய்துள்ளனர் அதனால் இத்தொடரில் இதயத்தை பிளைட்டில் எடுத்து செல்ல உள்ளனர் ஆனால் இதிலும் ஒரு சில சிக்கல் இருந்து வருகிறது அதாவது அந்த நேரத்தில் புயல் காற்று வரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது இவற்றை கடந்து எப்படி அறுவை சிகிச்சை செய்ய போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து முதல் நாளே கண்ணம்மா விருமாண்டி என்ற ஊருக்குள் சென்றுவுள்ளார். எனவே கண்ணமா லட்சுமியை பாரதியின் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். ஆயிஷா என்ற குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ள மருத்துவர் பயப்டுதால் பாரதியை இந்த சிகிச்சைக்கு அழைத்து வர உள்ளனர்.