வீட்டிற்கு வந்து லக்ஷ்மியை திட்டிய கண்ணம்மா.! கடும் கோவத்தில் பாரதி..

bharathi-kannama-serial-today-21
bharathi-kannama-serial-today-21

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் பிரபலமடைந்து ரசிகர்கலின் ஃபேவரட் சீரியலாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாரதி கண்ணம்மா.

கடந்த பத்து வருடங்களாக பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவிற்கு காரணமாக இருந்தவரும் வெண்பாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. வெண்பாவின் அம்மாவாக என்று கொடுத்திருக்கும் ஷர்மிளா எப்படியாவது வெண்பாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என ஒரு முடிவில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த வேலைக்காரன் சீரியலில் நடித்து இருந்த ஹீரோவை ரோஷித் என்ற கதாபாத்திரத்தில் வெண்பாவிற்கு ஜோடியாக களமிறக்கி உள்ளார்கள். வெண்பா ரோஹிதிடம் பாரதியைப் பற்றிய கூறினாலும் உனக்கு திருமணமாகி இருந்தால் கூட பரவாயில்லை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி விட்டான்.

இப்படிப்பட்ட நிலையில் மற்றொருபுறம் ஹேமாவிற்கு கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்றும் லக்ஷ்மி தான் தனது அக்கா என்றும் தெரியவந்துள்ளது. எனவே ஹேமா எப்படியாவது பாரதியின் மனசை மாற்ற வேண்டும் என்பதற்காக அவரிடம் தொடர்ந்து பேசி வருகிறாள்.

பாரதி நேரில் சந்தித்த ஹேமா எனக்கு தான் அம்மா இல்லையே யாரை டிவோர்ஸ் செய்ய போறீங்க என்று கேட்டு வருகிறார். உடனே பாரதி கண்ணம்மா தான் ஹேமாவை உசுபேத்தி வைத்திருப்பார் என்று நினைத்து கண்ணம்மாவை நேரில் சந்தித்த அந்த கோபத்தை கண்ணம்மா வீட்டிற்கு வந்து லட்சுமியின் மீது காட்டுகிறார்.

அதாவது நீ தான ஹேமாவிடம் இதனைப் பற்றி சொன்ன என்று கூற உடனே லக்ஷ்மி டாக்டர் அப்பா உங்கல திட்டடுனாங்கனா டாக்டர் அப்பாவ திட்டுங்க என்கிட்ட வந்து என் கோபத்தை காட்டுறீங்க ஹேமாவிடம் எதுவும் கூறவில்லை என்று கூறிய பிறகு கண்ணம்மா லட்சுமியிடம் சாரி கேட்டு விட்டு டிபன் செய்து தருகிறேன் என கூறுகிறார்.